தருமபுரி, நவ.27- பாப்பிரெட்டிப்பட்டி அருகே வழிப் பறியில் ஈடுபட்ட கேரளா மாநிலத்தைச் சேர்ந்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட் டிப்பட்டி அருகேயுள்ள பழைய சாலூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அறிவ ழகன். மனைவி பிரபாவதி. இவர், அரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பழைய சாலூர் பகுதியில் நடந்து சென்றுள்ளார். அப்போது, அந்த வழியில் தலைக்கவசம் அணிந்தவாறு இருசக்கர வண்டியில் வந்த இரு இளைஞர்கள், பிரபாவதியின் அணிந்தி ருந்த 4.50 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து தகவ லறிந்த காவல்துறையினர் தருமபுரி மாவட் டத்திலுள்ள அனைத்து சோதனை சாவடி களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது கோம்பூர் சோதனை சாவடி யில் வாகன தணிக்கையில் போது சந்தேக மான முறையில் வந்த இளைஞர்கள் இரு வரை பிடித்து விசாரணை செய்தனர். இவர் கள் சங்கிலி பறிப்பு சம்பவத்தில் தொடர் புடைய கேரளா மாநிலம், ஆவங்கால் பகுதி யைச் சேர்ந்த சலீம் மகன் சபீர் (32), அப்துல் காதர் மகன் நிசார் (33) என்பது தெரிய வந்தது. இவர்கள் சேலம் புதிய பேருந்து நிலையம் அருகில் தனியார் விடுதியில் தங்கி யிருந்து, இருசக்கர வாகனங்களை வாட கைக்கு எடுத்துக் கொண்டு, கிராமப் பகுதிக ளுக்கு சென்று தனியாக நடந்துச் செல் லும் பெண்களிடம் சங்கிலி பறிப்பில் ஈடுபட் டது தெரியவந்தது. இதையடுத்து, சபீர், நிசார் ஆகியோர் மீது அ.பள்ளிபட்டி காவல் துறையினர் வழக்குப் பதிந்து கைது செய்த னர்.