திருப்பூர் மாவட்டம் ராசிபாளையத்தில் இருந்து தர்மபுரி மாவட்டம் இண்டூர் வரை செல்லும் 400 கிலோவாட் உயர்மின் கம்பிவடம் செல்லும் பாதையில் ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உயர் மின் கோபுர கம்பி வடத்துக்கு கீழே ஈரோடு மக்களவை தொகுதி உறுப்பினர் அ.கணேசமூர்த்தி நிற்கும்போது, கையில் வைத்திருக்கும் டியூப் லைட் தானாக ஒளிர்வதையும், டெஸ்டரில் மின்சாரம் பாய்வதன் அறிகுறியையும் காணலாம். அந்த அளவுக்கு மின் கசிவு இப்பகுதியில் இருக்கிறது என்பதாலும் விவசாயிகள் விளைநிலத்தின் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்க்கின்றனர்.