tamilnadu

மாணவர்களின் சான்றிதழ்களில் எவ்வித குளறுபடியும் இல்லை கோவை மருத்துவக்கல்லூரி முதல்வர் அறிவிப்பு

கோவை, செப்.21 - கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்ப்பு பணி நடந்தது. அதன்படி, மாணவர்களின் சான்றிதழ்களில் எவ்வித குளறுபடியும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ள தாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையின் முதல்வர் அசோகன் தெரிவித் துள்ளார். சென்னையை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா கடந்த 2018ம் ஆண்டு மும்பையில் நீட் தேர்வு எழுதினார். தேர்வில் வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்து வந்தார். இந்நிலையில், அவர் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியதாக புகார் எழுந் துள்ளது. இந்த புகாரை தொடர்ந்து 4 பேராசி ரியர்கள் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த சூழலில், மருத்துவக் கல் லூரிகள் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தின் கீழ் வருவதால் முதலாமாண்டு மருத்துவ மாணவர் புகைப்படம் மற்றும் ஆவணங் களை மறு ஆய்வு செய்ய பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. முதற்கட்டமாக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 3 ஆயிரம் இடங்களை தேர்வு செய்த மாணவர்களின் ஆவணங்களை மறு ஆய்வு செய்யும் பணி கடந்த வெள்ளிக்கிழமை முதல் நடைபெற் றது. கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இந்தாண்டு 150 பேர் புதிதாக சேர்ந்துள்ள னர். அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அசோகன் கூறுகையில், ‘‘அரசு மருத்துவக் கல்லூரியின் துணை முதல்வர் லலிதா தலைமையில் 4 பேராசிரியர்கள் கொண்ட குழு மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும்  ஆவணங்கள் குறித்து ஆய்வு நடத்தியது.  முதற்கட்டமாக 148 மாணவர்களின் சான்றி தழ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. 2 மாணவர்கள் மட்டும் விடுப்பு எடுத்திருந் ததால் அவர்களின் சான்றிதழ்கள் சனியன்று ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வின் முடிவில் மாணவர்களின் சான்றிதழ்கள் மற்றும் அவர்கள் சமர்ப்பித்த ஆவணங்களில் எவ் வித குளறுபடியும் இல்லை என்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது.’’ என்றார்.