tamilnadu

img

மலைவாழ் மக்களை புறக்கணித்த அரசுப்பேருந்து மலைவாழ் மக்கள் சங்கம் கண்டனம்

வால்பாறை, ஆக. 4- வால்பாறை பூனாட்சி வனகிரா மத்தின் அருகே உள்ள மரப்பாலம் பேருந்து நிறுத்தத்தில் மருத்துவமனை செல்ல காத்திருந்த  மலைவாழ் மக் களை அரசுப்பேருந்து வேண்டு மென்றே புறக்கணித்து சென்றுள்ளது. இது இப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த வால்பாறை வனச்சரகத்திற் குட்பட்ட பூனாட்சி வன கிராமம் உள்ளது. இப்பகுதியில் கடந்த புதன் கிழமை முதல் வைரஸ் காய்ச்சல் தீவிர மாக பரவி வந்தது. இதனையடுத்து நட மாடும் மருத்துவ குழுவின் மூலமாக முகாம் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதன்பின் மலைவாழ் மக்கள் சிலர் கோட்டூர் மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று  சிகிச்சை மேற்கொண்டு வருகின்ற னர். இதனையடுத்து  சனியன்று  சிகிச்சை மேற்கொள்வதற்காக கோட் டூர் அரசுமருத்துவமனைக்கு செல்ல  மரப்பாலம் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்திற்காக நோய்வாய்ப்பட்ட வர்கள் சிலர் காத்திருந்தனர். இந் நிலையில் அப்பகுதி வழியாக  அரசுப் பேருந்து ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்துக்கொண்டிருந்தது. இதில் சிகிச்சைக்காக செல்லவிருந்த  மக்களை பேருந்தில் ஏற்றாமலே  சென்றுவிட்டதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டினர்.  இதுகுறித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் கோவை மாவட் டத் தலைவர் வி.எஸ்.பரமசிவம் கூறு கையில், அரசுப் பேருந்து மரப்பாலம் பகுதியில் மலைவாழ் மக்களை ஏற்றாமல் புறக்கணிப்பு செய்தது தொடர்பாக பொள்ளாச்சி போக்கு வரத்து  கழக மண்டல இயக்குனரிட மும், பொள்ளாச்சி மேலாளரிடமும் புகார் தெரிவித்துள்ளோம். இது போன்று இனி நடைபெறாமல் இருக்கவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும். இல்லையென்றால் மலைவாழ் மக்கள் சாங்கம் சார்பில் போராட்டத் தில் ஈடுபடும் என்றார்.