உதகை.நவ30- பிஎஸ்என்எல் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ள விஆர்எஸ் திட்டத்தால் ஏற்படும் அபாயங்களை விளக்கி குன்னூரில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. பிஎஸ்என்எல் நிறுவனத்தை நலிவடையச் செய்ய மத் திய அரசு திட்டமிட்டு பல்வேறு சீர்குலைவு நடவடிக்கை களை மேற்கொண்டு வருவதாக ஊழியர்கள் தரப்பில் தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இச்சூழலில், இந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிட விஆர்எஸ் திட்டத்தை தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பிஎஸ்என்எல் ஊழியர்கள் பல கட்ட போராட்டங்களை நடத்தி வருகி றார்கள். இந்நிலையில், விஆர்எஸ் திட்டத்தால் ஏற்படும் அபா யங்கள் குறித்து ஊழியர்கள் மத்தியில் விளக்கிடும் வகை யில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் குன்னூர் பிஎஸ்என்எல் அலுவலக மனமகிழ் மன்றத்தில் சிறப்பு கூட் டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் பிரின்ட்ஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஆர்.ஜேக்கப் மோரிஸ் முன்னிலை வகித்தார். சங்கத்தின் மாநில தலைவர் எஸ் செல் லப்பா, விஆர்எஸ் திட்டத்தின் அபாயங்கள் குறித்து விளக்க உரை ஆற்றினார். தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சி. வினோத் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்டம் முழுவதிலும் இருந்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.