கோவை, மார்ச் 18 – கோவையின் அமைதி யை குலைக்கும் வகையில் நடக்கும் அனைவரின் மீதும் காவல்துறையினர் பார பட்சம் பார்க்காமல் சட்ட ரீதியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமே அல் லாமல் யாருடைய அழுத் தத்திற்கும் ஆளாகாக் கூடாது என இஸ்லாமிய இயக்கங்கள் வலியுறுத்தி யுள்ளது. கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் புதனன்று இஸ்லாமிய இயக்கங்கள் பங்கேற்ற செய்தி யாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் கே.ராஜா உசேன் கூறுகை யில், மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மக்களால் எதிர்ப்பு போராட்டங்களும், தொடர் போராட்டங்களும் நடத்தப் பட்டு வருகின்றது. இதன்ஒருபகுதி யாக கோவையில் சி.ஏ.ஏ. அமல் படுத்திய நாள் முதல் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிகழ்வுகளில் எந்தவிதமான பதற்றமோ அமைதிக்கு குந்தகமும் வேறு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்பட வில்லை. கடந்த 20 நாட்களுக்கு மேலாக ஆத்துப்பாலம் ஷாஹின் பாஃக் மைதானத்தில் தொடர் போராட்டம் நடைபெற்று வந்தது.
இந்தப் போராட்டத்தை கலைப் பதற்காக கடந்த 2 ஆம் தேதி இந்து முன்னணி தலைமையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக இந்துத்துவா அமைப்புகளால் தொடர் தர்ணாப் போராட்டம் காந்தி புரம் தமிழ்நாடு ஹோட்டல் முன்பு நடைபெற்றது. அன்றிலிருந்து அடுத் தடுத்த விரும்பத்தகாத சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கோவையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் இந்து முன்னணி, பாஜக, விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ஆகியவற்றைச் சார்ந்தவர்கள் இந்த மேற்சொன்ன சம்பவங்களில் கைது செய்யப்பட்டு அவர்கள் மேல் வழக்கு கள் பதியப்பட்டுள்ளது.
அதேபோல், இஸ்லாமிய தரப் பிலும் ஒரு சிலர் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் மேற்சொன்ன சங்பரிவார அமைப்புகள் மேல் போடப் பட்ட வழக்குகளை காட்டிலும் இஸ்லாமியர்கள் மீது கூடுதலான சட்டங்களான ஊபா போன்ற வழக்கு கள் போடப்பட்டு உள்ளது. அதே சமயம் கைது செய்யப்பட்ட இந்து முன்னணியினர் மற்றும் வெடிகுண்டு வீசிய பிஜேபி, விஎச்பி போன்றவர்கள் மீது சாதாரண பிரிவுகளின் கீழ் வழக்குகள் போடப்பட்டதோடு கோவையில் மதகலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தாடு பேசிய இந்து முண்ணணி மாநில தலைவர் காடேஸ்வரன் சுப்ரமணி மீதும், அதே கருத்தை முகநூலில் பதிவிட்டு வரும் பாஜகவை சேர்ந்த கல்யாணராமன் மீதும் காவல்துறையினர் இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை. மேலும் இவர்களின் பேச்சை தொடர்ந்து ஆங் காங்கே ஆயுதங்களுடன் கூடிய கும்பல்களை கைது செய்து வரும் காவல் துறையினர் அவர்கள் மீதும் எந்தவிதமான நடவடிக் கைகளையும் எடுக்க வில்லை. இந்த நடவடிக்கை களை காணும்போது காவல்துறையின் மேல் நம்பிக்கையற்ற தன்மை ஏற்படுகிறது. காவல் துறைக்கு ஆளுகின்ற மத்திய பாஜக அரசு மற்றும் மாநில அரசால் ஏதேனும் அழுத்தம் கொடுக்கப்பட்டதா? என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்து கின்றது. எனவே, காவல்துறை இது போன்ற சங்பரிவார பயங்கர வாதிகள் மீது ஊப்பா போன்ற தேச துரோக வழக்குகள் தொடுத்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு தொடர்ந்து கோவையில் வன் முறை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செயல்பட்டு வரும் இந்துத்துவ சங்பரிவார் கும்பலை இரும்புக்கரம் கொண்டு ஓடுக்க வேண்டும். கோவை யைப் பொருத்தவரை காவல்துறை யின் அனைத்து விதமான நடவ டிக்கைகளுக்கும் முஸ்லிம்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறார்கள். எனவே காவல்துறை மேற்சொன்ன விஷயங்களில் சட்டரீதியாக நடவ டிக்கைகளை எடுக்க வேண்டுமே அல்லாமல் யாருடைய அழுத்தத் திற்கும் ஆளாகாக்கூடாது என தெரி வித்தார். முன்னதாக இந்த செய்தி யாளர் சந்திப்பில் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு நிர்வாகிகள் பங்கேற் றனர்.