பொள்ளாச்சி, ஜுன் 7- பொள்ளாச்சியில் லாரி மற்றும் கார் ஆவணங் களை தன் பெயருக்கு மாற்றி பல கோடிக்கணக்கில் அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட இடைத் தரகர் மீது வட்டாரப் போக்குவரத்து அலுவலர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கோவை மாவட்டம், பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள லாரி மற்றும் கார் உரிமையாளர் கள் தங்களுக்கு சொந்தமான வாகனங்களின் ஆவ ணத்தில் தங்கள் பெயர் இல்லாமல் வேறொரு பெயர் இருப்பதாக பொள்ளாச்சி வட்டார போக்குவரத்து அலுவலரிடம் வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலுவ லர் முருகானந்தம் சனியன்று புகார் குறித்து விசா ரணை மேற்கொண்டார். விசாரனையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இடைத்தரகராக வேலை பார்க்கும் அங்குலிங்கம் என்பவர் லாரி மற் றும் கார் உரிமையாளரிடம் ஆவணங்களை புதுப் பித்துத் தருவதாகக் கூறி ஆவணங்களை வாங்கியும், அதை தன் பெயருக்கு மாற்றி தனியார் நிறுவனத்தில் அடகு வைத்து பண மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதனையடுத்து வட்டாரப் போக்குவரத்து அலு வலர் கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள் ளார். இப்புகாரின் அடிப்படையில் பல கோடி மோசடி செய்த அங்குலிங்கம் மீது காவல் துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.