tamilnadu

img

ஊரடங்கில் ஏழைகளின் பசியாற்றிய பொறி வியாபாரம்

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் அதையொட்டிய அடுத்தடுத்த ஊரடங்குகள் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் புரட்டி போட்டுள்ளது. இன்றுவரை துரத்தி வரும் அத்தகைய நெருக் கடிகள், எதிர்காலத்தின் மீதான அச்சம் ஆகிய வற்றில் இருந்து எப்போது மீள்வோம் என விடை தெரியாத நிலை. இத்தகைய சூழலில் மேற்குறிப்பிட்ட நெருக்கடியிலிருந்து ஒரள விற்கேனும் தப்பியுள்ளதுடன், எவ்வித தம் பட்டமும் இன்றி பல குடும்பங்களின் பட்டி னியை போக்கி பசியாற்றியுள்ளது தமிழர்க ளின் பாரம்பரிய திண்பண்டமாக இருந்து வரும் பொறி வியாபாரம். இதுகுறித்து பொறி உற் பத்திக்கு பெயர் பெற்ற திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியைச் சேர்ந்த பொறி உற்பத்தி யாளர் சிலர் கூறுகையில்,

கனகராஜ்

பொறி உற்பத்தி செய்வதற்கு என்று தனி யாக நெல் உள்ளது. தண்ணீர் அதிகமாக இருக்கும் பகுதியில்தான் இந்த நெல் உற் பத்தி செய்கின்றனர். எங்கள் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோர் கர்நாடக மாநில நெல்லை தான் விலை கொடுத்து வாங்கு வோம். இந்த  நெல்லை ஊற வைத்து, பக்கு வப்பட்ட பின்பு பொறியாக உற்பத்தி செய் வதற்கு  ஏழு நாட்கள் ஆகும். சராசரியாக அவி நாசி பகுதியில் முன்பு ஒரு காலகட்டத்தில் பொறி உற்பத்தி செய்யும் 60 அடுப்புகள் இருந் தனர். இப்பொழுது வெறும் 12 அடுப்புகள் மட் டுமே தென்படுகிறது. கொஞ்சம், கொஞ்ச மாக இந்த தொழில் பெரும் நலிவை சந்தித்து வந்தது.

இந்த நிலையில்தான் தற்போது கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் பொறி விற்பனை என்பது எங்களுக்கு பெரும் கைகொடுத்தது. என்ன காரணம் என்றால் ஊரடங்கு காலத்தில்  பெரும் கார்ப்பரேட் நிறு வனங்களின் பிஸ்கட், சிப்ஸ் மற்றும் முறுக்கு, மிச்சர் போன்ற தின்பண்டங்கள் சப்ளை இல் லாததால் பெரும்பகுதியினருக்கு கிடைக்க வில்லை. இதனால் குழந்தைகள் முதல் பெரி யவர்கள் வரை பொறியினை விரும்பி உண்ணுகின்றனர். கொரோனா வைரஸ் தொற் றுக்கு முன்பு சராசரியாக 70 சாக்கு பொறி விற்பனை நடைபெற்றது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்று ஊரடங்கு கால கட்டத்தில் அதைகாட்டிலும் மிக அதிகப் டியான விற்பனை நடைபெற்றது.

இன்னும் சொல்லப்போனால், இந்த பகுதியில் பெரும்பாலான தொழிலாளர்கள் பனியன் தொழிலை நம்பி தான் இருந்து வந் தனர். திடீரென ஊரடங்கு அறிவிக்கப்பட்ட தால் வேலையிழந்து, வருவாயை இழந்து பெரும் சிரமத்திற்குள்ளாகினர். அத்தகைய பனியன் தொழிலாளிகள் பொறி விற்பனை  செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் அத்தொழிலாளிகளின் குடும்பங்களின் பட்டி னியை பொறி வியாபாரம் காப்பாற்றியதுடன், எங்களுக்கும் பெரும் கை கொடுத்தது.  மேலும், கொரோனா ஊரடங்கு காலகட் டத்தில் இருப்பு வைத்திருந்த அனைத்து நெல் களையும் கொண்டு பொறி உற்பத்தி செய் தோம்.

இவை பெரும்பாலும் விற்பனையான சூழலில் எங்களுக்கு புது நெருக்கடியாக அடுத்தகட்ட உற்பத்திக்கு கர்நாடக மாநிலத் திலிருந்து பொறி நெல் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால், மே மாதத்தில் ஊரடங்கு உத்தரவு சில கட்டுப்பாடுகளுடன் தளர்த்தப் பட்டதால் மீண்டும் நெல் எங்களுக்கு கிடைக்க துவங்கிவிட்டது. அதேநேரம், தற் போது ஊரடங்கு தளர்த்தப்பட்டதில் எங்க ளது பொறி  விற்பனை குறைய துவங்கியுள் ளது. ஆகவே, எதிர்காலத்தில் இந்த குடிசை தொழிலை அரசாங்கம் ஊக்குவிக்கும் வகை யில் குறைந்தபட்சம் மின்சாரத்திற்காவது மானியம் வழங்க வேண்டும் என கூறினார்

வளர்மதி

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு ஊர டங்கு காலத்தில் திண்பண்டங்களான முறுக்கு, மிச்சர் போன்றவற்றை பொதுமக் கள் மிக அதிகமாக சாப்பிட விருப்பமில்லை. காரணம் அவை 50 ரூபாய் வரை விற்பனை யானது. இதனை ஒரு குடும்பம் முழுவதும் விரும்பிய அளவிற்கு சாப்பிட முடியாது. இதைத்தாண்டி அதிகளவு உண்டால் சிலருக்கு அஜீரணம், வயிற்று வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படும். ஆனால், பொறியினை பொருத்தவரை விலையோ குறைவு, அதிக நாட்கள் வைத்து சாப்பிட லாம். ரூ.20 விலை கொடுத்து வாங்ககி சாப் பிட்டால், குடும்பம் முழுவதும் வயிறு முழு வதும் சாப்பிடலாம், அஜீரணக் கோளாறு ஏற்படாது. இதன்காரணமாக பொறி விற் பனை ஊரடங்கு காலத்தில் அதிகமாக வியா பாரமானது. ஆனால், தற்போது ஊரடங்கு தளர்வு ஏற்பட்ட பிறகு பொறி விற்பனை மிக வும் குறைந்து விட்டது. ஆகவே, அரசாங்கம் இந்த தொழிலை ஊக்கப்படுத்தும் வகையில் போதிய உதவிகளை செய்திட வேண்டுமென கூறினார்.

சிவகாமி:  

கொரோன காலத்தில் பொறி  விற்பனை எங்களுக்கு கை கொடுத்தது, பெரும்பாலும் ஏழைகளின் பசியைப் போக்கும் உணவாக இருந்தது. 30 வருடங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் பொறியினை உட்கொண்டு ஒரு டம்ளர்  காப்பியை குடித்தால் வயிறு நிரம்பி விடும் என்று கூறுவார்கள். அதே போல தான் இந்தக் காலகட்டத்தில் பலரின் பசியை போக்கியது என்று எங்களிடமே கூறியுள்ள னர். காலப்போக்கில் நவீனம் வளர வளர, பொறி உற்பத்தி குடும்பத் தொழிலாக மாறி விட்டது. இந்த வேலைக்கு தற்போது யாரும் விரும்பி வருவதில்லை. எதிர்காலத்தில் இந்தத் தொழில் யார் செய்வார்கள் என்று கேள்விக்குறியாக உள்ளது. ஆகவே, பொறி உற்பத்தி தொழிலை அரசாங்கம் ஊக்குவிக் கும் வகையில் மானியம் வழங்க வேண்டும் என கூறினார்.

-அருண், அவிநாசி