tamilnadu

img

 தீண்டாமை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர்

கோவை மாவட்டம், நடூர் ஏடிக்காலனி பகுதியில்  தீண்டாமை சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்திற்கு காரணமான சிவசுப்பிரமணி மற்றும் ஆறுமுகம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இடிந்து விழுந்த சுவரின் மீதமுள்ள பகுதியை முழுமையாக அகற்றிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுததி  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி திருவிக நகர் பகுதிக்குழு சார்பில் மேட்டுப்பாளையம் அருந்ததியர்காலனி அருகில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் பகுதிச்செயலாளர் வி.செல்வராஜ் தலைமை தாங்கினார். வடசென்னை மாவட்டசெயற்குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், தீஒமு மாவட்டச் செயலாளர்  வி.ஜானகிராமன், ராஜ்குமார்,  மகேந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.