tamilnadu

img

சமூக விரோதிகள் கூடாரமாக மாறி வரும் வேளாண் துறை குடியிருப்புகள்

அவிநாசி, ஜூன் 14- அவிநாசி ஒன்றியம் சேவூர், கருவலூர் பகுதிகளில் உள்ள  வேளாண் துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் பயனற்று சமூக விரோதி கூடாரமாக இருப்பதாக பொது மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.  அவிநாசி ஒன்றியம் சேவூர், கருவலூர் ஊராட்சி பகுதி களில் எட்டு வருடங்களுக்கு மேலாக வேளாண் துறைக்கு சொந்தமான குடியிருப்புகள் பயன்பாடு இன்றி உள்ளன. சேவூர், பந்தம்பாளையத்தில் ஐந்து வேளாண் துறை குடியி ருப்புகள் மிகவும் மோசமானதாகவும்,  அபாயமாகஉள்ளது. இதேபோல் கருவலூர் ஊராட்சி, மாரியம்மன் கோவில் பின்புறமாக உள்ள 5 குடியிருப்புகளில் ஒரு குடியிருப்பு மட்டும் அரசு துறையை சேர்ந்தவர் பயன்படுத்தி வரு கிறார். மற்ற 4 குடியிருப்புகள் சமூகவிரோத கூடாரமாக மாறி உள்ளது இரவு நேரங்களில் மது அருந்துவதும், சூதாட்டம்  போன்றவை நடைபெறுகிறது.  இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில்,  வேளாண் துறை குடியிருப்புகள் ஐந்து வருடங்களாக பயன்படுத்தாமல் உள்ளன. இதனால் சமூக விரோதிகள்   இரவு நேரங்களில் மது அருந்த பயன்படுத்துகின்றனர்.  மேலும் வருடந்தோறும் விநாயகர் சதுர்த்தியின் போது  வேளாண் குடியிருப்பை பயன்படுத்துகின்றனர்.  இதற்கு அரசுத் துறையைச் சேர்ந்தவரே இக்குடியிருப்பு களில் இருந்து மின்சாரத்தை முறைகேடாக வழங்கி வரு கிறார்.  இதுகுறித்து புகார் தெரிவிக்கப்பட்டும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையீட்டு  வேளாண் துறை குடியிருப்புகளை பாதுகாக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.