தருமபுரி, செப்.6- அரூர் அருகே ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், எல்லப்புடையாம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை 48 மாணவ, மாணவியர்கள் பயின்று வரு கின்றனர். இப்பள்ளி வளாகத் திலுள்ள அங்கன்வாடி மையத்தில் 25 குழந்தைகள் முன்பருவ கல்வி பெற்று வருகின்றனர். எல்லப் புடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஒரு தலைமை யாசிரியர் மற்றும் இரண்டு ஆசிரி யர்கள் பணியில் உள்ளனர். இதில் ஒரு ஆசிரியர் இடமாறுதலில் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டார். தலை மையாசிரியரும் உடல் நிலை பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் ஓராசிரியர் மட்டுமே பணியில் உள்ளார். ஒரே ஆசிரியர் 48 மாணவர்களுக்கும் பாடம் எடுப்பது சிரமமாக உள்ளது. எனவே, கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டுமென வலியு றுத்தி, மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் சார்பில் கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் அண்மை யில் கோரிக்கை மனு அளித்துள் ளனர். ஆனால், அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதை யடுத்து, தங்கள் குழந்தைகளின் கல்வி நலன் பாதிப்பதாக புகார் தெரிவித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்ளிட்ட கிராம மக்கள் எல்லப்புடையாம் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தின் நுழைவாயில் எதிரில் போராட் டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பெற்றோர்கள் கூறுகையில், இந்தப் பள்ளியில் படிக்கும் ஏழைக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் வகை யில் தமிழக அரசு கூடுதலாக ஆசிரி யர்களை நியமிக்க வேண்டும். பள்ளி தலைமையாசிரியர் கடுமை யாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதால் அவருக்கு மருத்துவ விடுப்பு அளித்துவிட்டு, புதியதாக வேறு தலைமையாசிரியர் நிய மிக்க மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் தெரிவித்தனர்.