தேர்தல் பார்வையாளர் எச்சரிக்கை
ஈரோடு, டிச. 16- ஈரோடு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் பதவிகளை ஏலம் விடுவது போன்ற தேர்தல் விதிமீறலில் ஈடுபட் டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஈரோடு தேர்தல் பார்வையாளர் எச்ச ரித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் ஊரக மற்றும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியி டுபவர்கள் தங்களது வேட்புமனுக்களை இறுதி நாளான திங்களன்று தாக்கல் செய்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் நடத்த 27 மாவட்டங்களுக்கு மாநில தேர் தல் ஆணையத்தின் சார்பில் தேர் தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட் டுள்ளனர். இதில் ஈரோடு மாவட்ட தேர்தல் பார் வையாளராக நியமிக்கப்பட்ட கே.வி வேகானந்தன் திங்களன்று ஈரோடு யூனி யன் அலுவலகம் மற்றும் வாக்குச்சாவடி மையங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வை மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், உள் ளாட்சித் தேர்தல் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்க பிரத்தியேக தொலைபேசி எண்கள் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் தேர்தல் விதிமீ றல் தொடர்பாக இதுவரை எந்த புகா ரும் வரவில்லை. உள்ளாட்சி பதவி களை ஏலம் விடப்படுவது, கறி விருந்து நடத்துவது போன்ற புகார்கள் வந்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். புகார்களை பொது மக்கள் தொலைபேசி வாயிலாக எப் போது வேண்டுமானாலும் தெரிவிக் கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.