tamilnadu

img

உழைக்கும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும்

உடுமலை, ஆக. 22- உழைக்கும் பெண்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையில் சமூக மாற்றம் ஏற்பட வேண்டும் என சிஐடியு அகில இந்திய துணை தலை வர் மாலதி சிட்டிபாபு பேசினார். அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட மாநாடு உடு மலை வாணி ராணி மாஹலில் நடைபெற்றது.  இம்மாநாட்டிற்கு மாவட்டதலைவர் விஜயலட்சுமி  தலைமை தாங்கினார். மாநாட்டின் கொடியை சாந்தகுமாரி ஏற்றி வைத்தார். சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் குமார், அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் அம் சராஜ், ஓய்வூதியர் சங்கத்தின் பாலசந்திரமூர்த்தி, பிஎஸ்என்எல் எம்ப்ளாயீஸ் ஊழியர் சங்கத்தின் சக்திவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  மாநாட்டைத் தொடங்கி வைத்து  சிஐடியு அகில இந்திய துணை தலைவர் மாலதி சிட்டிபாபு பேசுகையில், உழைக்கும் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக உள்ளது. பெண்களின் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், இந்த சமூகத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும்.மேலும் நாட்டில் பல போராட்டங்கள், அதிக உயிர் தியாகத்தால் பெறப்பட்ட தொழிலாளர் நல உரிமைகளை தற் போது உள்ள பாஜக அரசு திருத்தும் வேலையில் ஈடுபட்டு உள்ளது. இதன் படி குறைந்தபட்ச மாத ஊதியம் நான்காயிரம் என்று சட்டம் கொண்டு வந்துள்ளது என்பது மிகவும் மோச மான ஒன்றாகும். அங்கன்வாடி மையங்களை தனியார்மயமாக் கிட முயற்சிக்கும் அரசின் எண் ணத்தை நம்முடைய ஒன்றுபட்ட போராட்டங்கள் மூலம் முறியடிப் போம் என்று பேசினார். மாநாட்டின் இரண்டாம் நாளான வெள்ளியன்று (ஆக.23ஆம் தேதி) மாலை உடுமலைரயில் நிலையம் அருகில் இருந்து தொடங்கி முக்கிய விதிகள் வழியாக பேரணி நடை பெறவுள்ளது.