tamilnadu

img

எங்களை ஊருக்கு அனுப்புங்கள்! புலம்பெயர் தொழிலாளர்கள் அணிவகுப்பு

கோவை, மே 13- கோவையில் புலம்பெயர்ந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங் களை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்திடக்கோரி ஆங்காங்கே பெட்டி, படுக்கைகளுடன் ஊர்வல மாக திரண்டு வருவதால், அவர் களை காவல்துறையினர் சமாதா னப்படுத்தி திருப்பி அனுப்பி வரு கின்றனர். கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் 500 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஓன்று கூடி தங்களை பீகார் மாநிலத்திற்கு அனுப்பி வைக்கக்கோரி போராட் டத்தில் ஈடுபட்டனர். இதே போல  உப்பிலிபாளையம் பகுதியில் 500க்கும்  மேற்பட்ட பீகாரிகள்  ஊருக்கு அனுப்பி வைக்கக்கோரி வி.ஏ.ஒ அலுவலகம் முன்பு பெட்டி, படுக்கைகளுடன் குவிந்தனர். இவர்களை காவல் துறையினர் சமரசப்படுத்தி திருப்பி அனுப்பி வைத்தனர். கோவை மாவட்டத்தில் இருந்து வட மாநிலத் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் பணி கடந்த 4 நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் புதனன்று கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் 500க்கும் மேற்பட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழி லாளர்கள் தங்களை சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி ஊர்வலமாக நடந்து வந்தனர். இவர்களை  காவல் துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரையும் ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர். இதேபோல்,  கோவை உப்பிலி பாளையம் பகுதியில் 500க்கும்  மேற்பட்ட வடமாநில தொழிலா ளர்கள் வி.ஏ.ஒ அலுவலகம்  முன்பாக முன்தினம் இரவு முதலே  காத்திருந் தனர். கடந்த 40 நாட்களாக வேலை இல்லாமல், கையில் பணமும் இல் லாமல் மிகுந்த சிரமத்துடன்  உள் ளோம். மேலும், அரசு அலுவலகங் களுக்கு சென்றால் காவல் துறை யினர் விரட்டுவதாகவும், வாடகை கொடுக்கக்கூட பணம் இல்லாத ததால் தங்களை விரைவாக  ஊருக்கு அனுப்ப மாவட்ட நிர்வாகம் நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.  

இதனையடுத்து சிங்காநல்லூர்  காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப் போது படிப்படியாக வட மாநிலத் தொழிலாளர்களை ஊருக்கு  அனுப்பும்பணி நடைபெற்று வருவ தாகவும், விரைவில் அனைவரையும் ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித் தனர். இதனையடுத்து அத்தொழி லாளர்களை வாகனத்தில் ஏற்றி அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த இடங்களுக்கு அனுப்பி வைத்தனர். கோவை மாவட்டத்தை பொறுத் தவரை இதுவரை பத்தாயிரத்திற் கும் மேற்பட்ட வட மாநிலத் தொழி லாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இன்னும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் ஊருக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு கூடுதல் ரயில்கள் இயக்கி சொந்த ஊருக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அத்தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.