கோபி, மார்ச் 18- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக கோபியில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை காலவரையின்றி மூட வருவாய்த்துறை உத்தரவை தொடர்ந்து 10க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டது. உலகம் முழுவதும் பெரும் உயிர் சேதத்தையும், அச்சத் தையும் ஏற்படுத்தி வரும் கொரானா வைரசால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பலியான நிலையில் இந்தியாவிலும் ஒருவர் பலியாகி உள்ளார். இந்நிலையில் தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவ டிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளிகள், கல்லூரி கள், சுற்றுலா தளங்கள், கோயில்கள், வணிக நிறுவனங்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக கோபி பகுதியில் உள்ள நகை கடைகள், ஜவுளி நிறுவனங்கள், டிபார்ட்மெண்ட்டல் ஸ்டோர் போன்ற கடைகளின் உரிமையாளர்களின் கூட்டம் வருவாய்த்துறை சார்பில் புதனன்று மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கடையை மூடும் படி உரிமையாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. இதனையடுத்து கோபியில் முதல்கட்டமாக 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உடனடி யாக மூடப்பட்டது. இந்த நிறுவனங்கள் காலவரையின்றி மறு உத்தரவு வரும் வரை விடுமுறை அளிப்பதாக உரிமையாளர்கள் தெரிவித்தனர்.