tamilnadu

img

அங்கன்வாடி பணியாளருக்கு எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பயிற்சியளித்து பணியமர்த்த வேண்டும்

அவிநாசி, ஜூலை 13- தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் கள் மற்றும் உதவியாளர் சங்க அவி நாசி ஒன்றிய மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்க அவிநாசி ஒன்றிய மாநாடு சங்கத்தின் துணைத் தலைவர் பா. வளர்மதி தலைமையில் நடை பெற்றது. மாவட்ட செயற்குழு உறுப் பினர் டி.சுசீலா முன்னிலை வகித் தார். இணைச்செயலாளர் ரா.இந்தி ராணி வரவேற்புரையாற்றினார். மாநாட்டில் ஒன்றிய செயலாளர் ஜி. தனலட்சுமி, ஒன்றிய பொருளாளர் மு.மல்லிகா  அறிக்கையை முன் வைத்தனர். இதையடுத்து தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்ட  கிளை தலைவர் ரமேஷ், சிஐடியு  சங்கத்தின் திருப்பூர் மாவட்ட  துணைத்தலைவர் ஏ.ஈஸ்வர மூர்த்தி, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் திருப்பூர் மாவட்டச் செயலாளர் செல்லம்மாள், மாநில  செயற்குழு உறுப்பினர் சித்ரா,  மாநில பொருளாளர் பாக்கியம்,  மாவட்டத் தலைவர் கே.விஜய லட்சுமி ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். 

புதிய நிர்வாகிகள் தேர்வு

தலைவராக பொ.வளர்மதி, துணைத் தலைவர்களாக சரஸ்வதி,  பானுப்பிரியா, நதியா, செயலாள ராக இந்திராணி, இணைச் செய லாளராக செல்வி, ஜோதிமணி, சுகன்யா, பொருளாளராக மல்லிகா,  மாவட்ட பொருளாளராக தன லட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப் பினராக சுசீலா  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநாட்டில், அங்கன்வாடி ஊழியர்களுக்கு-உதவியாளர்களுக்குக் குறைந்த பட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ.18 ஆயிரம், சமூகப் பாதுகாப்பு திட்டங் களையும்,ஓய்வூதியத்தையும் வழங்கிட வேண்டும். அங்கன் வாடியில் எல்கேஜி, யுகேஜி வகுப்பு களுக்கு அங்கன்வாடி பணியாள ருக்கு பயிற்சியளித்து பணியமர்த்த வேண்டும் என உள்ளிட்ட பல் வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. மாநாட்டின் நிறைவாக பானுப்பிரியா நன்றி கூறினார்.