கோவை, ஜூன் 10- கோவை கோணவாய்க்கால்பாளையம் பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரி வித்து, அதிகாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட் டம் நடத்தினர் கோவை மாவட்டம், கோணவாய்க்கால் பாளையம் அருகே அற்புதம் நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கோவை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. குடியிருப்புகளுக்கு அருகே உள்ள சிறுவர் பூங்கா பகுதியில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலை யம் அமைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், திங்களன்று கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகளை துவக்க வந்த அதிகாரிகளை, அப்பகுதி மக்கள் சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சிறுவர் பூங்காவில் குடியிருப்புகளுக்கு அருகே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலை யத்தை அமைக்கக் கூடாது எனவும், வேறு பகுதியில் அந்நிலையத்தை அமைக்க வேண்டும் என தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர்.