தருமபுரி, ஆக.22- விளைநிலங்களில் பாரத் பெட் ரோலியம் குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், இத்திட்டம் குறித்து முழுமையான தகவலை அளிக்க வேண்டுமென வியாழனன்று விவ சாயிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியை சந்தித்து மனு அளித் தனர். பாரத் பெட்ரோலியம் கார்ப்ப ரேசன் லிமிடெட் நிறுவனம் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள இருகூர் முதல் பெங்களூரு தேவன குந்தி வரை விளைநிலங்கள் வழி யாக பெட்ரோலிய குழாய் பதிக்க உள்ளது. இதன் ஒரு பகுதியாக, தருமபுரி மாவட்டம் நாகர் கூடலில் துவங்கி சின்னம்பள்ளி, மாக்கனூர், சிடலகாரம்பட்டி, ஓஜிஅள்ளி, வள்ளூர், ஆண்டியூர், பூச்சிட்டியூர், பேடர அள்ளி, சோளகாப்பட்டி, பணைகுளம், திருமல்வாடி, எர்ரண அள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள விளைநிலங்களில் பாரத் பெட் ரோலிய குழாய் பதிப்பது குறித்து இத்திட்ட சிறப்பு துணை ஆட்சியர் (கோவை) சார்பில், ஒரு மாதத்திற்கு முன்பு தருமபுரி மாவட்ட விவ சாயிகளுக்கு நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அந்த நோட் டீஸில் குழாய் பதிப்பிற்கு விளை நிலங்கள் கையகப்படுத்துவது குறித்து கருத்து கேட்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இத்திட்டம் குறித்து மாவட்ட நிர்வாகம் விவசாயி களுக்கு எந்த விளக்கமும் அளிக்க வில்லை. இதனால் விவசாயிகள் பெரும் குழப்பத்திற்கும், மன உளைச்சலுக்கு ஆளாகிய நிலையில், இத்திட்டத்தை விளை நிலங்கள் வழியாக செயல்படுத்தக் கூடாது என விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத் தினர். மேலும் மாவட்ட ஆட்சி யரிடம் விவசாயிகள் மனு அளித் தனர். தருமபுரி வறட்சியான மாவட்ட மாகும். இதில் பென்னாகரம் வட்டம் மலைபாங்கன மேடு,பள்ளம் நிறைந்த பகுதியாகும். இங்கு சிறு, குறு விவசாயிகள் உள்ளனர். இப் பகுதியில் தொழிற்சாலை இல்லை. ஓட்டுமொத்த வாழ்வாதாரமே விவ சாய நிலங்கள் தான். இச்சூழலில் பாரத் பெட்ரோலிய குழாய்கள் விளை நிலங்களில் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பறி போகும் எனத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், விளைநிலங் களில் பாரத் பெட்ரோலிய குழாய் அமைக்கும் முடிவை எதிர்த்தும், 2006-தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, பிபிசிஎல் நிறுவ னத்தின் மூலம் பெட்ரோலியம் குழாய் பதிப்பு தொடர்பான அனைத்து கோப்புகளையும் விவ சாயிகளுக்கு வழங்கவேண்டும் என வலியுறுத்தியும் 250க்கும் மேற் பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர்விழியிடம் மனு அளித்தனர்.