tamilnadu

img

தலித் உடலை புதைக்க ரியல் எஸ்டேட் கும்பல் எதிர்ப்பு மாவட்ட நிர்வாகம் தலையிட மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

கோவை, செப். 8-  பொது மயானத்தில் தலித் உடலை புதைக்க ரியல் எஸ்டேட் ஆக்கிரமிப்ப ளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட் டோர் தலையிட்டு இறந்தவர் உடலை புதைத்துள்ளனர். கோவை மாவட்டம், துடியலூர் - கனு வாய் செல்லும் சாலையில் அண்ணா காலனி, புது முத்துநகர், காந்தி வீதி உள் ளிட்ட பகுதிகள் உள்ளது. தலித் அருந்த திய மக்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் பொது மயானம் உள்ளது. 80 வருடத்திற்கு மேலாக இந்த மயானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த மயா னத்திற்கு அருகில்  நீலகிரி ரியல் எஸ்டேட் என்ற பெயரில்  7 ஏக்கர் நிலத்தில் வீட்டு மனைகள் பிரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை அதிக விலைக்கு விற்பதற்கு இந்த சுடுகாடு இடையூறாக இருப்பதால் இறந்தவர்களின் உடலை புதைக்க இந்த ரியல் எஸ்டேட்டா ளர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், தாழ்த்தப்பட்ட மக்களை மிரட்டியும் வருவ தாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.  

இந்நிலையில், செவ்வாயன்று இதே போன்று இறந்த தலித் ஒருவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இத னையடுத்து இப்பகுதி மக்கள் துடியலூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட் டனர். அப்போது, இப்பிரச்சினையில் மார்க் சிஸ்ட் கட்சியினர் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் தலையீடு செய்தனர். இதையடுத்து தகவலறிந்து சம் பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் போராட்டக்கா ரர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். அப்போது, சம்மந்தப்பட்ட எஸ்டேட் உரிமையாளர் மீது தேசிய தாழ்த்தப்பட்ட எஸ்.சி எஸ்.டி வழக்கு பதிவு செய்ய வேண் டும் என்று கோரிக்கை மனுவை பெரிய நாயக்கன்பாளையம் டிஎஸ்பி பெற்று கொண்டார்.

இதனையடுத்து இறந்தவர் சட லம் புதைக்கப்பட்டது.   இதுதொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் பெரியநாயக்கன்பாளைய ஒன்றிய செயலா ளர் என்.பாலமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக் கையில், தலித் மக்கள் பயன்படுத்தும் சுடு காட்டை ஆக்கிரமிக்கும் ரியல்எஸ்டேட் கும் பலின் முயற்சியை தடுத்து நிறுத்திட மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலை யிட வேண்டும். தலித்மக்களுக்கான மயா னத்தை சுற்றுச்சுவர் எழுப்பி சுமார் 65 சென்ட் நிலத்தை பாதுகாத்து தரவேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டு கொள்கிறோம். இந்த அவல நிலை இனியும் தொடரும் பட்சத்தில் அனைத்து கட்சியி னர் மற்றும் பொதுமக்களை திரட்டி போராட் டத்தில் ஈடுபடுவோம் என அந்த அறிக்கை யில் தெரிவித்துள்ளார்.