tamilnadu

img

கள்ளச்சந்தையில் ரேசன் பொருட்கள் - மாவட்ட ஆட்சியரிடம் மாதர் சங்கம் புகார்

கோவை, ஆக. 14 – பொதுமக்களுக்கு விநியோகிக்கப் படும் ரேசன் பொருட்கள் கள்ளச் சந் தையில் விற்கப்படுவது தொடர்பாக மாதர் சங்கத்தினர் நடத்திய ஆய்வ றிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் அளிக்கப்பட்டது. ஊரடங்கு காலத்தில் ரேசன் கடை களில் பொதுமக்களுக்கு உரிய முறை யில் பொருட்கள் விநியோகிக்கப்படு கிறதா என்பது குறித்து அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறு வது குறித்து பொதுமக்கள் மற்றும் ரேசன்கடை பணியாளர்களிடம் கேட் டறிந்தனர்.

குறிப்பாக, பொதுமக்க ளுக்கு விநியோகிக்க வேண்டிய பொருட்கள் கள்ளச்சந்தையில் வெளி நபர்களுக்கு விற்பனை செய்வது தெரி யவந்துள்ளது. மேலும், வெளிச்சந்தையில் விற்கப் படும் பொருட்களைக் கட்டாயப்ப டுத்தி வாங்கச் சொல்வது, பொருட்க ளின் அளவைக் குறைப்பது, அரசு அறி வித்த அளவில் பொருட்களை வழங் காமல் குறைவாக வழங்குவது, 15 ஆம் தேதிக்கு மேல் பொருட்கள் இல்லை என்று பயனாளிகளைத் திருப்பி அனுப் புவது உள்ளிட்ட முறைகேடுகள் கண்ட றியப்பட்டுள்ளது.

ஆகவே மேற்கண்ட கடைகளின் முறைகேட்டைத் தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு உரிய  பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற ஆய்வறிக்கையை மனுவாக தயா ரித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங் களில் மாதர் சங்கத்தினர் அளித்தனர்.  கோவை மாவட்ட வருவாய் அலுவ லர் ராமதுரையிடம், மாதர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ராதிகா, பொரு ளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜலட்சுமி, சுதா மற்றும் பங்கஜவல்லி உள்ளிட்ட நிர் வாகிகள் மனு அளித்தனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் மாதர் சங்க மாவட்டச் செய லாளர் பி.எஸ் பிரசன்னா தலைமை யில் மாவட்ட நிர்வாகிகள் லலிதா, கோமதி, கொங்குநதி ஆகியோர் அளித் தனர்.

சேலம்

சேலம் மாவட்ட ஆட்சியரிடம், சங் கத்தின் மாவட்டச் செயலாளர் ஞான சௌந்தரி, துணைச் செயலாளர் ஆர்.வைரமணி, ரேணுகா உள்ளிட்ட நிர்வா கிகள் மனு அளித்தனர்.