கோவை நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்தபோது ரயில்வே வளர்ச்சிப் பணிகளில் அதிக கவனம் செலுத்தினார். அதன் விளைவாக கோவையிலிருந்து மேட்டுப்பாளையம், கோவை வழியாக சேலம் பாலக்காடு, திருப்பதி, ராமேஸ்வரம் என 11 புதிய ரயில்கள் கிடைத்தன. கோவை ஜங்சனுக்குவராமல் போத்தனூர் வழியாக சென்று கொண்டிருந்த 5 ரயில்கள் கோவை ஜங்சன் வழியாக இயக்கப்படுகின்றன. 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக அவர் மேற்கொண்ட முயற்சிகளை பாராட்டிய அவர்கள் பி.ஆர்.நடராஜனை தேர்வு செய்ய மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.இதுகுறித்து ரயில்வே போராட்டக்குழு உறுப்பினர் ராக் ரவீந்திரன் கூறுகையில், கோவை வர்த்தக சங்கத்தில் அனைத்து தரப்பினரும் பங்கேற்ற ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற முறையில்பி.ஆர்.நடராஜனிடம் கோவையின்ரயில்வே மேம்பாட்டுக்கான சிலகோரிக்கைகளை அந்த கூட்டத்தில் முன்வைத்தோம். அப்போது அவர் எங்களிடம் கூறியது இன்றும்நினைவிருக்கிறது, கோரிக்கை வைத்தால் தானாக நிறைவேறாது.அதை வென்றெடுக்க போராடவும்தயாராக இருக்க வேண்டும் என்றுகூறினார். அவர் சொன்னது போலவே அரசியல் கட்சிகள்,தொழில் அமைப்புகள், தன்னார்வதொண்டு நிறுவனங்கள் உட்பட அனைத்து தரப்பினரும் இடம்பெற்ற ரயில்வே போராட்டக்குழுவை அமைத்தோம். அதன் தலைவர் பொறுப்பையும் பி.ஆர்.நடராஜன் ஏற்றுக்கொண்டார். பொறுப்பில் இருந்த 5 ஆண்டு காலம் முழுவதும் ரயில்வேவளர்ச்சிக்கான முயற்சிகளில்அவர் முழுமையாக ஈடுபட்டார்.
பாஜக தலைவரின் பாராட்டு
பி.ஆர்.நடராஜன் தலைவராக செயல்பட்ட ரயில்வே போராட்டக்குழுவில் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டவர் ஜி.கே.நாகராஜ். அவர் கூறுகையில், பி.ஆர்.நடராஜன் எம்பியா இருந்த வரைக்கும் அந்த போராட்டக்குழு செயல்பாட்டில இருந்தது. அப்ப நடத்தின போராட்டங்களின் பயனாக மெயின் ரூட்டாக இருந்த போத்தனூருக்கு பதிலா இப்ப கோவை ஜங்சன் மாற்றப்பட்டிருக்கு. போத்தனூர் வழித்தடத்திலிருந்து கூடுதலா 3 ரயில் இந்த வழியாக திருப்பி விடப்பட்டிருக்கு என்றார். அதேநேரம் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் கோவை ரயில்வே வளர்ச்சி குறித்து கூற அதற்குமேல் அவரிடம் ஏதும் இல்லை. பி.ஆர்.நடராஜன் மீண்டும் போட்டியிடுவது குறித்து கேட்டபோது, நான் இப்போது அவருக்கு எதிராக பாஜக வேட்பாளரின் பயண ஒருங்கிணைப்பாளராக உள்ளேன் என்றார்.
கோவை நாடாளுமன்ற உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் மேற்கொண்ட முயற்சிகளின் விளைவாக கிடைத்த ரயில்கள்
1) கோவை-மேட்டுப்பாளையம் தினசரி பயணிகள் ரயில்
2) சென்னை துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில்
3) திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்
4) பிக்கானிர் எக்ஸ்பிரஸ் ரயில்
5) கோவை-மங்களுர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்
6) ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்
7) கோவை-நாகர்கோவில்-தூத்துக்குடி லிங்க் எக்ஸ்பிரஸ் ரயில்
8) கோவை-மன்னார்குடி செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயில்
9) சேலம்-சொரனூர் எக்ஸ்பிரஸ் ரயில்
10) ஈரோடு-பாலக்காடு பயணிகள் ரயில் சேலம் வரை நீட்டிப்பு
11) மங்களுர்- பாலக்காடு இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில்
-----------------------------
போத்தனூர் வழித்தடத்திலிருந்து கோவை ரயில் நிலையத்துக்கு திருப்பப்பட்ட ரயில்கள்
1) ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் ரயில்
2) மங்களுர்-பாண்டிச்சேரி எக்ஸ்பிரஸ் ரயில்
3) திருநெல்வேலி-பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்
4) திருவனந்தபுரம்-மும்பை எக்ஸ்பிரஸ் ரயில்
5) திருநெல்வேலி-தாதர் எக்ஸ்பிரஸ் ரயில்
ஊரில் இருக்கும் போது கோரிக்கைகளுக்கான போராட்டங்களை முன்னெடுப்பார். தில்லிக்கு சென்றதும் துறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்து மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை வலியுறுத்துவார். கேள்விகளாகவும், உரையாகவும் கோவை மக்களின் தேவைகளை நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும் எதிரொலித்தார். போராட்டக்குழு சார்பில் 3 முறை ரயில்வே அமைச்சரை தில்லியில் சந்தித்து பேசினோம். இத்தகைய அவரது தொடர் முயற்சிகளின்பயனாக 16 ரயில்கள் கோவை ஜங்சனுக்கு கிடைத்துள்ளன. இதற்காககோவை தொழில்துறை அமைப்பு, இந்திய வர்த்தகர் சங்கம், மலையாளிகள் சங்கம் ஆகியவை இணைந்து பாராட்டு விழா நடத்தினர். அதேபோல், கோவை ரயில் நிலையத்தில் இரண்டாவது சுரங்க நடைபாதை, எஸ்க்லேட்டர் மற்றும் லிப்ட் வசதியை செய்திருந்தார். 13 ரயில்வே மேம்பாலங்கள் அமைக்கவும் அவரது தலையீடு குறிப்பிடத்தக்கது. அதற்கான நிலம் எடுப்பு தாமதமானபோது மாவட்ட ஆட்சியரை சந்தித்து வலியுறுத்தி பணிகளைதுரிதப்படுத்தினார். போத்தனூர்- பொள்ளாச்சி அகலப்பாதைக்கான பணியிலும் எம்.பி என்கிற முறையில்நடராஜன் மிகுந்த அக்கறை காட்டினார். அப்பணி நிறைவுபெற்று தற்போது ரயில்கள் இயக்கப்படுகின்றன. இன்று தொழிலாளர்களும், மாணவர்களும் அதிக அளவில் பயனடைய அவரது முயற்சிகளே காரணம் என்றார். அதற்கு அடுத்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற ஏதேனும் குறிப்பிடத்தக்க பணிகள் நடந்துள்ளதா என்கிறகேள்விக்கு ஏமாற்றத்தோடு அவர்அளித்த பதில் எம்.பின்னு ஒருத்தர் இருந்ததே இந்த 5 வருசத்துல யாருக்கும் தெரியாது. ஒரு எம்.பியால அதிக பட்சமா என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதையெல்லாம் பி.ஆர். நடராஜன் செய்தார். மீண்டும் கோவை மக்களுக்கு அப்படி ஒருவாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றார்.
- சி.முருகேசன்.