tamilnadu

img

சீரான குடிநீர் விநியோகம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

கோவை, ஆக. 10–  சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோவை தடாகம் பகுதியில் சனியன்று பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட் டதால் பரபரப்பு ஏற்பட்டது.  கோவை மாவட்டம், பெரியநாயக் கன்பாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட சின்ன தடாகம் பகுதியில் குடிநீர் உள் ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற  வலியுறுத்தி இப்பகுதி மக்கள் தொடர்ந்து  வலியுறுத்தி வருகின்றனர். இதன்தொடர்ச் சியாக நடைபெற்ற கிராமசபை கூட்டத் தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற் றப்பட்டது. ஆனால், இத்தீர்மானங்கள் கடந்த மூன்று வருடங்களாக நிறைவேற் றப்படவில்லை என கடந்த சில தினங்க ளுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து பொதுமக்கள் மற்றும் மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் மனு அளித்தனர்.  இதன்பிறகும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், ஆவேசமடைந்த பொதுமக்கள் சின்னதடாகம் எம்ஜிஆர் நகர் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சின்னத்தடாகம் ஊராட்சியில் முறையாக அத்திக்கடவு குடிநீரை விநியோகிக்க வேண்டும். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறை வேற்றப்பட வேண்டும் என்பதை வலியு றுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.  இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கேசவமணி, திமுக பொதுக்குழு உறுப்பினர் சி.எம்.கே. குமார், திமுக பொறுப்பாளர் வே.சூரியன்தம்பி, மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் பழனிச்சாமி, டி.வி. செல்வராஜ் உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், பொது மக்களும் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவலறித்து சம்பவ இடத்திற்கு வந்த துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் காவல்துறை ஆய்வாளர் அத்திக்கடவு நீரேற்றுநிலைய அலுவலர் ஆகியோர் பிரச்சனைக்கு உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் மறியல் போராட் டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.