திருப்பூர், அக். 20 – மேற்குத் தொடர்ச்சி மலை பகு தியில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் பவானி ஆற்றில் செம் பழுப்பு நிறத்தில் வரும் தண்ணீரே சுத்திகரித்துக் குடிப்பதற்காக விநி யோகம் செய்யப்படுகிறது. இந்த நீரை முழுமையாக சுத்திகரித்து மக்களுக்கு சுகாதாரம் பாதிக்காத வகையில் வழங்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருப்பூர் இரண்டாவது கூட்டு குடிநீர் திட்டத்தில் மேட்டுப்பா ளையம் பவானி ஆற்றில் இருந்து அவிநாசி வழியோர கிராமங்கள் மற்றும் திருப்பூர் மாநகரத்தில் குடி நீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமீப நாட்களாக இப் பகுதிகளில் விநியோகம் செய்யப் படும் குடிநீர் செம்பழுப்பு நிறத்தில் மிகவும் கலங்கலாக வருகிறது. ஒருபுறம் டெங்கு காய்ச்சல் மற்றும் பலவிதமான காய்ச்சல் தாக்குதல் அதிகரித்து பலர் மருத்து வமனைகளுக்குப் படையெடுத்து வருகின்றனர். இந்நிலையில் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளும் குடிநீரைக் காய்ச்சி குடிக்கும்படியும், நீண்ட நாட்களுக்குத் தேக்கி வைக்கக் கூடாது என்றும், வீடு, குடியிருப் புகளின் சுற்றுப்பகுதிகளில் தேங்கும் நீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்றும் அறிவு றுத்தி வருகின்றன. ஒருபுறம் மக்களுக்கு அறிவு றுத்தி வரும் அரசு நிர்வாகம், மறு புறம் தனது கடமையை சரிவர நிறைவேற்றாமல் உள்ளதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டு கின்றனர். வீடுகளுக்கு விநியோ கம் செய்யும் கலங்கலான குடி நீரை முழுமையாக சுத்திகரித்து வழங்க வேண்டும் என்று வலியு றுத்துகின்றனர்.
இது தொடர்பாக நுகர்வோர் அமைப்பைச் சேர்ந்தோர் தெரி விக்கையில், உள்ளாட்சி நிர்வா கங்கள், குடிநீர் வடிகால் வாரிய நிர்வாகம் கூட்டாக இயங்கி காலச் சூழ்நிலைக்கு ஏற்றவாறு குடிநீர் சுத்திகரிப்புப் பணியை மேற் கொள்ள வேண்டும் என்று கூறு கின்றனர். குறிப்பாக நீரேற்று நிலையத்தில் இருந்து ஆற்று நீரை உறிஞ்சி விநியோகம் செய்வதற்கு முன்பாக ஆரம்ப கட்ட சுத்திக ரிப்பு செய்யப்படுகிறது. எனினும் கொள்ளளவுத் திறன் கூடிய நவீன ஃபில்டர் பெட்டுகள் உருவாக்கி படிகாரமிட்டு சுத்திகரித்தால்தான் தெளிவான குடிநீர் கிடைக்கும். ஆனால் தற்போதுள்ள நிலைமை யில், கார்பனேடிவ் மிக்சர் நிறத் தில் 3500 டர்பிடிட்டி அழுக்க டைந்த குடிநீர் நேரடியாக பம்ப் செய்து கொண்டிருப்பதாகச் செய்தி கேட்டு அதிர்ச்சி ஏற்படு கிறது. குடிநீர் வாரியத்திடம் இப்போதுள்ள ஃபில்டர் பெட் தளம் 1500 டர்பிடிட்டி கலங்கல் நீரைத்தான் சுத்திகரிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. எனவே சுத்தகரிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும். குடிநீர் 0.5 பிபிஎம் குளோரின் ஏற்றம் பெற்றதாக இருந்தால்தான் மக்களுக்கு குடிப் பதற்கு ஏதுவானதாக இருக்கும். எனவே இந்த விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தி உடனடியாக குடிநீர் சுத்திகரிப்பு திறனை அதி கரித்து, தெளிவான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். குடிநீர் வழங்கும் ஆரம்ப அடிப்படை நிலையில் கவனம் செலுத்தாமல் பொது மக்களுக்கு மட்டும் அறி வுரை சொல்லி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை எடுப்பது அர்த்த மற்றதாகும் என்றும் நுகர்வோர் அமைப்புகள் விமர்சிக்கின்றனர்.