அன்றும்…
கோவை மக்களவை தொகுதி உறுப்பினராக பி.ஆர்.நடராஜன் இருந்தபோது, பதினோராவாது ஐந்தாண்டுத் திட்டத்தில் நாட்டில் உயர்கல்வி பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட அரசிடம் யோசனை உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு எழுத்து மூலம் பதிலளித்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் டி.புரந்தேஸ்வரி, நாட்டில் கல்வி பயிலும் மாணவர்களில் உயர்கல்வி பெறுவோர் 12.4விழுக்காடு உள்ளதாக தெரிவித்தார். மத்திய பல்கலைக் கழகங்கள் இல்லாத மாநிலங்களில் பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய பல்கலைக்கழகம் அமைத்திட உள்ளதாகவும், ஐஐஎம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்திட திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார். அதன்படி 2009இல் யுபிஏ அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த சட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம் உட்பட நாடு முழுவதும் 19 மத்திய பல்கலைக் கழகங்களை அமைக்கப்பட்டன.
இன்றும்…
மோடியின் 5 ஆண்டுகால பாஜக ஆட்சியில் மத்தியபல்கலைக்கழகம் ஒன்று கூட புதிதாக அமைக்கப்படவில்லை. அதே நேரத்தில் ஆர்எஸ்எஸ் சங்பரிவார் குண்டர்களின் கல்வி வளாக அராஜகங்களாலும், மோடி அரசின் பொருளாதார தாக்குதல்களாலும் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் குறைந்துள்ளது. மத்திய அரசின் உயர்கல்வி ஆய்வு நிறுவனம் (ஹஐளுழநு)வெளியிட்டுள்ள தகவலின்படி 2017-18இல் 18லிருந்து 23 வயதுக்குட்பட்டோரில் உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் 25.8 சதவிகிதம் மட்டுமே. இதில் தலித் மாணவர்கள் 21.8 சதவிகிதத்தினரும், பழங்குடியின மாணவர்கள் 15.9 சதவிகித்தினருமே உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். பட்டமேற்படிப்பில் தலித் மாணவர்கள் 14.4 சதவிகிதமும், பழங்குடியின மாணவர்கள் 5.2 சதவிகிதம் மட்டுமே சேர்ந்துள்ளனர்.