tamilnadu

img

பள்ளி வாகனத்தில் தான் செல்ல வேண்டும் மாணவர்களை சிறை வைத்த தனியார் பள்ளி - பெற்றோர்கள் முற்றுகை

கோவை, ஜூன் 19- பள்ளிக்குச் சொந்தமான வாக னத்தில் தான் மாணவர்கள் வந்து செல்ல வேண்டும் என தனியார் பள்ளி நிர்வாகம் மாணவர்களை பள்ளி வளாகத்தில் சிறை வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.  கோவை, விளாங்குறிச்சி பகுதியில் ஆர்.ஜே மெட்ரி குலேசன் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் கே.ஜி வகுப்புகள் முதல் 12ம் வகுப்பு வரை உள் ளது. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின் றனர். இதில் புதனன்று மாலை  பள்ளி நேரம் முடிந்தும் நிர்வா கத்தினர் குழந்தைகளை வீட்டுக்கு அனுப்பாமல் பள்ளி வளாகத்தி லேயே அமர வைத்துள்ளனர். நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வீடு திரும்பாததால் அச்சமடைந்த பெற்றோர்கள் பள்ளிக்கு வந்தனர். அப்போது பள்ளிக்குச் சொந்த மான வாகனத்தில் மட்டுமே குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். தனியார் வாகனத்தில் வருவதை ஏற்க முடியாது என்று அப்பள்ளி நிர் வாகத்தினர் நிபந்தனை விதித்த னர். இதுதொடர்பாக பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திற்கு இடையே வாக்குவாதம் ஏற் பட்டது.  இதுகுறித்து பெற்றோர்கள் கூறுகையில், பள்ளிக்குச் சொந்த மான பேருந்தில் தான் குழந்தை களை பள்ளிக்கு அனுப்ப வேண் டும் என்று பள்ளி நிர்வாகம் சேர்க்கையின்போது எங்களிடம் தெரிவிக்கவில்லை. இதனால், குழந்தைகளை அழைத்துவர நாங்கள் தனியார் வாகனங்களை ஏற்பாடு செய்திருந்தோம். தற் போது பள்ளி நிர்வாகம் நாங்கள் ஏற்பாடு செய்திருந்த வாகனத் தில் குழந்தைகளை அனுப்பாமல் சிறை வைத்துள்ளனர். 3 மணிக்கு வீடு திரும்பவேண்டிய குழந்தை கள் 6 மணியாகியும் வீடு திரும் பவில்லை.  இதுகுறித்து தனியார் ஓட்டு நர்கள் தான் எங்களுக்குத் தகவல் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி யடைந்து பள்ளிக்கு வந்து பள்ளி நிர்வாகத்தினருடன் பேசினோம். அவர்கள் எங்கள் பள்ளி வாகனத் தில்தான் மாணவர்கள் வந்து செல்ல வேண்டும் என்று நிபந் தனை விதிக்கிறார்கள். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த் தையைத் தொடர்ந்து குழந்தை களை எங்களுடன் அனுப்பி வைத்தனர், என தெரிவித்தனர்.  பள்ளி நிர்வாகத்தின் இச்செயல் பெற்றோர்களிடையே  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளதாகவும், நீண்டநேரமாக உணவு இல்லாமல் இருந்ததால் குழந்தைகள் சோர்வடைந்ததாக வும் பெற்றோர்கள் குற்றம்சாட்டி னர்.