கோவை, மார்ச் 2 - கோவை பாவானி ஆற்றில் ரசாயன் கழிவுகள் அதிகம் கலந்து வருவதைத் தடுக்க வேண்டுமென அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பவானி ஆற்று நீரானது கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டத்தில் 1.70 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் நேரடியாகவும், மறைமு கமாகவும் பாசன வசதி பெறுகிறது. பவானி ஆற்றில் நீர் வரத்து குறைந்தாலும் இதுவரை முழுமையாக வற்றியதில்லை. மேலும், பவானி ஆற்று நீரை 1.2 கோடி ரூபாய் செலவில் இரு இடங்களில் ஆன்லைன் கண்கா ணிப்பு நிலையம் அமைத்து 24 மணி நேரம் கண்கா ணிக்கப்பட்டு வருகிறது. இது தவிர ஆற்று நீர் பல்வேறு இடங்களில் பெறப்பட்டு பி.எச் அளவு, ஆக்சி ஜன், அமோனியா, நைட்ரஜன், பயோ கெமிக்கல், நைட்ரேட், குளோரைடு அளவு கண்டறியப்பட்டு வருகி றது. தேக்கம்பட்டி மற்றும் மேட்டுப்பாளையத்தில் கண்கா ணிப்பு நிலையங்களில் மாசு சோதனையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பவானி ஆற்றின் கரையோரப் பகுதி களில் பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருவதால் தொழிற்சாலை கழிவுகள் அதிகமாக கலந்து வருகிறது. அதுமட்டுமின்றி ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி கழிவு நீர்களும் பவானி ஆற்றில் விடப்படுவதால் ஆற்று நீர் மாசுபடுகிறது. இந்நீரை குடிக்கும் மக்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும், மாசு கலப்பு விவரம் கண்டறியபட்டு நடவடிக்கை மேற்கொள்வதிவில்லை எனவும், குடிநீர் மாசு கலப்பை முழுமையாக தடுக்காமல் காலம் கடத்தப்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, மாசு கலப்பை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என அப்பகுதிப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள் ளனர்.s