பொள்ளாச்சி, ஜூன் 26- பொள்ளாச்சி கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாள ருக்கும், அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர் ஒருவருக் கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல் நிலையமானது தற்காலிகமாக மூடப் பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் காவல் நிலையத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் பெண் காவலர் ஒருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டது. இதனையடுத்து புதனன்று கோட்டூர் மற்றும் ஆனை மலை உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் காவ லர்கள் 50 பேருக்கு கொரோனோ பரிசோதனை நடத்தப் பட்டது.
இதில், கோட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வா ளர் ஒருவருக்கும், அங்கு பணிபுரிகின்ற தூய்மை பணியா ளர் ஒருவருக்கும் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட் டது. பின்னர் அவர்கள் இருவரும் கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர். இதன்பின்னர் கோட்டூர் காவல் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தற்காலிகமாக மூடப்பட்டது.