tamilnadu

img

கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் பெண்ணை கன்னத்தில் அறைந்த காவல் ஆய்வாளர்

சேலம், பிப். 26- சேலம் அருகே கொலையாளி களை கைது செய்ய வலியுறுத்தி உற வினர்கள் சாலை மறியலில் ஈடு பட்டபோது பெண் ஒருவரை காவல்  ஆய்வாளர் கன்னத்தில் அடித்து இழுத்துச் சென்ற சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே ஓமலூரை அடுத்த  கோட்டகவுண்டம்பட்டி பகுதியைச்  சேர்ந்தவர் சூர்யா. ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இந்நிலையில் திங்களன்று ஓமலூர் அருகே பாகல் பட்டியிலிருந்து பணியை முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டி ருந்த சூர்யாவை மர்ம நபர்கள் சிலர்  வழிமறித்து அரிவாளால் வெட்டி யுள்ளனர். இத்தகவலறிந்த உறவி னர்கள் சூர்யாவை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில் செவ்வாயன்று காலையில் சிகிச்சை பலனின்றி சூர்யா மரணமடைந்தார். இதை யடுத்து கொலையாளிகளை கைது  செய்யும் வரை சூர்யாவின் உடலை  வாங்க மாட்டோம் என உறவி னர்கள் தெரிவித்திருந்தனர். இது வரை கொலையாளிகள் கைது  செய்யப்படவில்லை. இதைக் கண்டித்து சூர்யாவின் உறவினர்கள்  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவ லகம் எதிரே உள்ள பிரதான சாலை யில் புதனன்று மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு வலியுறுத் தினர். ஆனால் மறியலில் ஈடுபட்ட வர்கள் கொலையாளிகள் கைது  செய்யப்படும் வரை போராட் டத்தில் இருந்து பின்வாங்க மாட் டோம் என கூறினர். வாக்குவாதத் தையடுத்து தள்ளு முள்ளு ஏற் பட்டது. பின்னர் மறியலில் ஈடுபட்ட வர்களை போலீசார் தரதரவென  இழுத்துச் சென்று அப்புறப்படுத் தினர்.  அப்போது, மறியலில் ஈடுபட்ட பெண் ஒருவரை காவல் ஆய்வாளர் குமார் கன்னத்தில் அறைந்து தரதரவென இழுத்து சென்றனர். இதனால் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.  இதன் பின்னர் கொலை யாளிகளை விரைந்து கைது செய்வ தாக காவல்துறையினர் உறுதிய ளித்ததை அடுத்து மறியலில் ஈடு பட்டவர்கள் கலைந்து சென்றனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீர்  சாலை மறியல் காரணமாக அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.