tamilnadu

img

மாநில உரிமையை பறிக்கும் புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு

கோவை, ஜூன் 25-   மாநில உரிமையை பறித்தும், மும்மொழிக் கொள்கையை திணிக் கும் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கையை மத்திய அரசு உடன டியாக திரும்பப்பெற வலியுறுத்தி தமுஎகச, கலை இலக்கிய பெருமன் றம், ஆசிரியர், மாணவர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இணைந்து கோவையில் செவ் வாயன்று கண்டன ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  இந்தி, சமஸ்கிருத திணிப்பு, மும்மொழிக் கொள்கை, நீட்தேர்வு, கல்வியை காவிமயமாக்குவது, மாணவர்களின்  நலனுக்கு எதிரான கஸ்தூரி ரங்கன் குழு சமர்ப்பித்த புதிய கல்விக் கொள்கை ஆகிய வற்றை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி புதிய கல்விக் கொள்கைக்கெதிரான கூட்டியக் கத்தின் சார்பில் செவ்வாயன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமுஎகச மாவட்ட செயலாளர் மு.ஆனந்தன் தலைமை தாங்கினார்.  தமுஎகசவின் மாநில துணை தலைவர் கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம் மற்றும் சி.ஆர்.இரவிந்திரன், ப.பா.ரமணி,  மீ.உமாமகேஸ்வரி, கே.இராம சாமி, எம்.குணசேகர், எம்.தினேஷ், எ.தங்கபாசு, சு.சந்திரசேகர் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கம், கலை இலக்கிய பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம், அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், பள்ளி கல்வி பாது காப்பு இயக்கம், தமிழ்நாடு ஆரம் பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ஓய்வுபெற்ற பள்ளி-கல்லூரி ஆசி ரியர்கள் நலச் சங்கம், கோவை இலக்கிய சந்திப்பு, களம் சங்கமம்,  வளர்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பங் கேற்று கண்டன முழக்கமிட்டனர்.