tamilnadu

img

அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தால் செவிலியர் உயிரிழப்பு

தருமபுரி அரசு மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்

தருமபுரி, மே 16- தருமபுரி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தால் செவிலியர் விபத் தில் உயிரிழந்ததால் ஆவேசம டைந்த செவிலியர்கள் அரசு மருத்து வமனை வளாகத்தில் போராட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி அரசு மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் குமுதா (38), பாலாமணி (44) ஆகிய செவி லியர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் பணியாற்றி வருகின்றனர். இவர் கள் இருவரும்  வெள்ளியன்று பணி யாற்றிவிட்டு சொந்த ஊரான காவே ரிப் பட்டணத்துக்கு இரு சக்கர வாக னத்தில் சென்றுள்ளனர்.  அப்போது  கிருஷ்ணகிரி மெயின் ரோடு, பையூர் அருகே ஏற்பட்ட விபத்தில் செவி லியர் குமுதா சம்பவ இடத்திலேயே பலியானார். செவிலியர் பாலா மணி  பலத்த காயம் ஏற்பட்டு தரும புரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை அறிந்த மற்ற செவிலியர் கள் மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் அடிப்படை  வசதிகள் செய்து கொடுக்காததால் தான் விபத்தில் இறக்க நேரிட் டது என குற்றம்சாட்டி மருத்துவ  கல்லூரி வளாகத்தில்  போராட்டத் தில் ஈடுபட்டனர். 

குறிப்பாக, கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ  பணியாளர்களுக்கு போக்குவரத் துக்கும், தேவைப்பட்டால் தங்குவ தற்கும் வசதி செய்துதரப்படும் என  அரசு அறிவித்தது. ஆனால், இத்த கைய ஏற்பாடுகள் செய்யப்படா ததன் காரணமாகவே விபத்தில் செவிலியர் உயிரிழக்க நேரிட்டது. எனவே, விபத்தில் இறந்த குமுதா குடும்பத்துக்கு கொரோனா  தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழந்தால் அரசு அறிவித்தபடி நிவாரணமாக ரூ. 50 லட்சமும்,  குடும்பத்தில் ஒருவருக்கு அரசு  வேலையும் வழங்க முன்வர வேண்டும். கொரோனா தடுப்புப்  பணியில் உள்ள செவிலியர்களுக்கு வீட்டிற்கு சென்றுவர போக்குவ ரத்து வசதி மற்றும் தங்கி பணி யாற்ற விரும்புவோர்க்கு தனி அறை யுடன் கூடிய உணவு உள்ளிட்ட  அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும். செவிலியர்களுக்கு பாது காப்பு உபகரணங்கள் தேவைக் கேற்ப வழங்கவேண்டும். தொடர்ந்து செவிலியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொ டுக்க மறுக்கும் முன்னாள் கல்லூரி முதல்வர் தற்போது கொரோனா சிறப்பு அதிகாரியாக பணியாற்றும் சீனிவாசராஜை தருமபுரி மருத்துவக் கல்லூரியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என போராட்டத் தின் வாயிலாக வலியுறுத்தினர்.

இதனை அறிந்த உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழ கன், மாவட்ட ஆட்சியர் எஸ்.மலர் விழி, கோட்டாட்சியர் தேன்மொழி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட் டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அப்போது இறந்த குமுதா குடும பத்துக்கு ரூ 50 லட்சம் உள்ளிட்ட அரசு நிவாரணம் அவரது குடும்பத் தில் ஒருவருக்கு வேலை, செவிலி யர்களுக்கு போக்குவரத்து வசதி, தங்கும் வசதி ஆகிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி யளித்தனர். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.