tamilnadu

மனைவி மீது கொலைவெறி தாக்குதல் - கணவர் கைது

 கோவை. பிப், 17 - கோவையில் மனைவி மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய கணவன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்த னர்.  கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆச்சிபட்டி யைச் சேர்ந்தவர் சுரேஷ் (31) டிரைவர். இவரது மனைவி ஐஸ்வர்யம் (25). கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவது வழக்கமாக கொண்டிருந்தது. இதன் காரணமாக ஐஸ்வர்யம் கடந்த 2 வருடத்துக்கு முன்பு கணவரை பிரிந்து தனது பெற்றோருடன் வசித்து வரு கிறார். இந்நிலையில், வெள்ளியன்று ஐஸ்வர்யம் தனது துணிகளை எடுத்து வருவதற்காக கணவர் வீட்டுக்கு சென் றார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட் டது. இதில், ஆத்திரம் அடைந்த சுரேஷ் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார்.  இதில், பலத்த காயம டைந்த ஐஸ்வரியம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலை யத்தில் புகார் அளித்தார்.இதனையடுத்து காவல் துறையி னர் அப்புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து சுரேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.