tamilnadu

img

செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்

கோவை, ஜூன் 21-  தொலைக்காட்சி செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலைக் கண்டித்து வெள்ளி யன்று கோவையில் அனைத்து பத்திரிகையாளர்கள் சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.  தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீ வைகுண்டம் பகுதியில் பாலி மர் தொலைக்காட்சியின் செய்தி யாளராக முத்துவேல் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு காவல்துறையினர் மேற்கொண்டு வரும் கட்டப்பஞ்சாயத்து குறித்த செய்தியை பதிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப் பகுதி காவல்நிலைய ஆய்வாளர் கூலி படையினரை ஏவி முத்துவேல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனை யில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்ப வத்தைக் கண்டித்து தமிழகம் முழு வதும பத்திரிகையாளர்கள் கண் டன குரல் எழுப்பி வருகின்றனர். இதனையடுத்து காவல் ஆய்வளார் உள்ளிட்ட நான்குபேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொலை வெறி தாக்குதல் நடத்த கூலிப்படையை ஏவிய காவல் ஆய்வாளர் மீது கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும், பத்திரிகையாளர் பாதுகாப்பு சட்டத்தை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வெள்ளியன்று அனைத்து பத்திரி கையாளர்கள் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.