tamilnadu

img

மே தின விழா பொதுக்கூட்டம்

ஈரோடு, ஜூன் 17- பவானி தாலுகா ஜம்பை பேரூராட்சி வாய்க்கால்பாளை யத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மே தின பொதுக்கூட்டம் ஞாயிறன்று நடைபெற்றது. கிளை செயலா ளர் பி.மாதையன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.துரைராஜ், பி.பி.பழனிசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தாலுகா செயலாளர் எ.ஜெகநா தன், கமிட்டி உறுப்பினர் டி.ரவீந்திரன், விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் தாலுகா செயலாளர் எஸ்.மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், வாய்க்கால்பாளையம் கீழ்காலனியில் பொதுக் கழிப்பறை கட்டிக் கொடுக்க வேண்டும். அனைத்து வீதிகளுக்கும் சாக்கடை வசதியுடன், கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும். வாடகை வீட்டில் செயல்படும் அங்கன் வாடி மையத்திற்குச் சொந்தமான புதிய கட்டிடம் கட்ட வேண்டும். 60 வயதைக் கடந்தவர்களுக்கு நிபந்தனை யின்றி ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடிநீரை சுத்தி கரிப்பு செய்து வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.