மேட்டுப்பாளையம், செப். 3- மேட்டுப்பாளையம் மலையடிவார கிராமங்களில் இரவு நேரங்களில் சிறுத்தைகள் நுழைந்து ஆடுகளை கடித்து கொல்வதால் அப்பகுதி கிராம மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் உள்ள மலையடிவார கிராமமான பனப்பள்ளிபுதூர் என்னு மிடத்தில் ஷாஜஹான் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் கட்டி வைக்கபட்டிருந்த ஆடு ஒன்று செவ்வாயன்று காலை கடித்து குத றப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது. முன்னதாக கடந்த ஞாயிறன்று அவ ரது பக்கத்துக்கு தோட்டத்தில் இதே போன்று ஆடு கொல்லப்பட்டு கிடந்த நிலையில் தனது ஆடும் அதேபோன்று இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி யடைந்த ஷாஜஹான் இது குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத் திற்கு வந்த வனத்துறையினர் அப் பகுதியில் ஆய்வு நடத்தினர். மேலும், வனத்துறை கால்நடை மருத்துவர் இறந்து கிடந்த ஆட்டின் உடலை பரி சோதனை நடத்தினார். ஆடுகள் கொல்லப்பட்ட இடத்தை சுற்றி கிடைக்கும் காலடித்தடம் மற்றும் ஆடு கொல்லப்பட்ட விதம் குறித்து முழு மையாக ஆய்வு நடத்திய பின்னரே இரவு ஊருக்குள் புகுந்தது சிறுத் தையா அல்லது வேறு ஏதேனும் விலங்கா என்பது தெரியவரும் என்று வனத்துறையினர் கூறினர். மேலும், ஏற்கனவே இக்கிராமத்தில் வனத் துறை சார்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரி வித்தனர். கடந்த ஒரு மாத காலமாக தங்க ளது கிராமத்தில் சிறுத்தை நடமாட் டம் உள்ளதாகவும், விவசாய பணிக ளுக்காக தோட்டங்களுக்கு அச்சத்து டனே சென்று வருவதாகவும், விரை வில் ஊருக்குள் நுழையும் சிறுத்தை யினை பிடிக்க வனத்துறை நடவ டிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேதனையுடன் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். மேலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் உள்ள மோத் தேபாளையம் கிராமத்தில் புகுந்து கால்நடைகளைக் கொன்று வந்த இரண்டு சிறுத்தைகள் அடுத்தடுத்து வனத்துறை வைத்த கூண்டுகளில் சிக்கியுள்ள நிலையில் தற்போது மீண்டும் சிறுத்தைகளின் நடமாட்டம் துவங்கியுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதி கிராம மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரி களிடம் கேட்ட போது, விரைவில் பனப்பள்ளிபுதூர் கிராமத்தில் சிறுத் தையினை பிடிக்க பயன்படுத்தப்படும் கூண்டு வைக்கப்படும் என்றனர்.