tamilnadu

img

விலைவாசி உயர்வு பிரச்சனையை திசை திருப்ப குடியுரிமைத் திருத்தச் சட்டமா? மாதர் சங்கம் கேள்வி

திருப்பூர், பிப். 12 – மத்திய அரசின் பொருளாதா ரக் கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்ந்து சாமானிய மக்கள் வாழ முடியாத நிலை ஏற் பட்டு வருகிறது. இப்பிரச்சனை யில் கவனம் செலுத்தாமல் மக்கள் கவனத்தை திசை திருப்பும் வகை யில் குடியுரிமைத் திருத்தச் சட் டத்தை மத்திய அரசு கொண்டு வந் திருப்பதைக் கண்டித்தும், மக்க ளைப் பிளவுபடுத்தும் இந்த சட்டத்தைக் கைவிட வலியுறுத்தி யும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. திருப்பூரில், செவ்வாயன்று காலை தொடங்கி இரவு வரை 10 மையங்களில் இந்த பிரச்சார இயக்கம் நடத்தப்பட்டது. பெருமா நல்லூர் சாலை பாண்டியன் நகர், அங்கேரிபாளையம், பெரியார் காலனி, வேலம்பாளையம், குமரா னந்தபுரம், எம்எஸ் நகர், கல்லம் பாளையம், வெங்கடேஸ்வரா நகர், வீரபாண்டி, இடுவம்பாளை யம் ஆகிய இடங்களில் இந்தத் தெருமுனைப் பிரச்சார இயக் கம் நடைபெற்றது. இதில், மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மைதிலி, மாவட்டச் செயலாளர் எஸ்.பவித்ராதேவி, மாவட்டப் பொருளாளர் ஏ. ஷகிலா, மாநில துணைத் தலைவர் ஜி.சாவித்திரி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பி.செல்வி, பி.லட் சுமி, துணைச் செயலாளர் எஸ்.பானுமதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஈ.அங்குலட்சுமி, எம்.நிர்மலா, டி.மினி, கே.வசந்தி, எஸ்.பானுமதி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.