கோவை, ஜூன் 28 - கோவையில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவது மக்களிடையே அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள் ளியன்று 43 பேரும், சனியன்று 26 பேரும் பாதிக்கப்பட்ட நிலையில் ஞாயிறன்று உக்கடம் மீன் மார்க் கெட் பகுதியில் வியாபாரிகள் மற் றும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை, துடியலூரில் கொரோனா நோய்த்தொற்று பரவி வரும் நிலையில் துடியலூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா பரி சோதனை செய்யப்பட்டு வருகி றது.
இந்நிலையில், துடியலூர் பகு தியில் செயல்பட்டு வரும் மதுரை கோனார் மெஸ் உணவகத்தில் பணியாற்றி வரும் 4 இளைஞர் களுக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது. 4 பேரும் இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர்.
இது தவிர துடியலூர் விஸ்வ நாதபுரத்தை சேர்ந்த 28 வயது பெண், 21, 29 வயது ஆண்கள் ஆகிய 3 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் அலுவலகத்தில் இரு கூரைச் சேர்ந்த 31 வயது பெண் அமைச்சுப் பணியாளராக பணி யாற்றி வருகிறார். இவர் கடந்த சில தினங்க ளுக்கு முன் பழநி சென்று வந் துள்ள நிலையில், தற்போது இவ ருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.கோவை அரசு மருத்துவம னையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வரும் 22 வயது பெண் மருத்துவருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. ஏ
ற்கனவே கொரோனா உறுதி செய்யப்பட்ட வர்களுடன் தொடர்புடையவர்க ளுக்கு எடுக்கப்பட்ட பரிசோத னையில் கே.கே.புதூரை சேர்ந்த ஒரு பெண், 3 ஆண்கள், ஒலம்பஸ் பகுதியை சேர்ந்த 27 வயது இளை ஞர், பொள்ளாச்சி கோட்டூரைச் சேர்ந்த ஒரு பெண், 65 வயது மூதாட்டி, 10 வயது சிறுவன், எம்.ஜி.ஆர். மார்கெட் வியாபாரியான 46 வயது ஆண் ஆகிய 9 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட் டுள்ளது.
இது தவிர அரசு, தனியார் மருத் துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றவர்களுக்கு மேற்கொள் ளப்பட்ட பரிசோதனையில் சூலூர் அபிராமி அவென்யுவைச் சேர்ந்த 16 வயது சிறுமி, பூ மார்கெட்டை சேர்ந்த 36வயது ஆண், பி.கே. புதூரைச் சேர்ந்த 37 வயது ஆண், செம்மாண்டம்பாளை யத்தை சேர்ந்த 45 வயது பெண், இடையர்பாளையத்தை சேர்ந்த 52 வயது ஆண், சரவணம்பட்டி யைச் சேர்ந்த 50 வயது ஆண், டவுன்ஹால் பகுதியை சேர்ந்த 32 வயது இளைஞர் ஆகியோருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை, குனியமுத்தூரில் செயல்பட்டு வரும் தனியார் மருத் துவமனையில் சிகிச்சைக்கு வந்த ஒருவருக்கு கொரோனா நோய்த் தொற்று அண்மையில் உறுதி செய் யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற் றிய மருத்துவர்கள் உள்பட அனை வருக்கும் கொரோனா பரிசோ தனை செய்யப்பட்டது. இதில் மருத்துவமனையின் தலைமை பெண் மருத்துவருக்கு (65 வயது) கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நி லையில், கோவையில் வெள்ளி யன்று 43 பேருக்கும், சனியன்று 26 பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள் ளது.
இதன்மூலம் கோவையில் கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 428 ஆக உயர்ந்துள் ளது. கோவை இ.எஸ்.ஐ. மருத்து வமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 21 ஆண்கள், 22 பெண்கள் பூரண குணமடைந்து சனியன்று வீடு திரும்பினர்.
இந்நிலையில், சனியன்று இ.எஸ்.ஐ. மருத்துவ மனையில் 224 பேர் சிகிச்சைப் பெ
ற்று வருகின்றனர். மேலும், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான எம்.ஜி.ஆர் மார்க்கெட்டில் வியாபாரிகள் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மார்க்கெட் மூடப்பட்டது. இந்த விஷயத்தில் மாநகராட்சி நிர்வா கம் மிகக் கடுமையான நடவடிக் கைகளை மேற்கொண்டு வருகி றது.
கொரோனா கட்டுப்பாடு மண்டலங்களில் தூய்மைப்பணி கள் துரித கதியில் மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இந்நிலையில், ஞாயிறன்று உக்கடம் பகுதியில் உள்ள சில் லறை மீன் விற்பனை அங்காடி யில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதனால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடக்கூடாது என்று ஆலோசிக்கப்பட்டு அங்கு வரும் வாடிக்கையாளர்கள் தனி மனித இடைவெளியைப் பின் பற்றி மீன் வாங்கி செல்ல தடுப்பு கள் அமைக்கப்பட்டன.
இந்த சூழ லில், வியாபாரிகள் மற்றும் வாடிக் கையாளர்களுக்கு ஸ்வாப் டெஸ்ட் எடுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டு, அனைவரது விவரங்களும் சேகரிக்கப்பட்டது. இந்த பணிகளை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன் குமார் ஜடாவத், உள்ளிட்ட அதிகா ரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்ட னர். மேலும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த ஒலி பெருக்கி மூலம் அறிவிப்புகள் வெளியிடப் பட்டது.