tamilnadu

img

பணம் தராததால் கம்பெனி புகுந்து கொலைவெறி தாக்குதல் இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேர் கைது

இந்து முன்னணியைச் சேர்ந்த நான்கு பேர் கைது

திருப்பூர், செப். 8 – திருப்பூரில் விநாயகர் சதுர்த்தி கொடண்டாட பணம்  தரவில்லை என்று விநாயகர் சிலை வாகனத்துடன் கம்பெனிக் குள் புகுந்து தொழிலாளர்கள்  மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியது தொடர்பாக நான்கு  பேரை காவல்  துறையினர் கைது செய்தனர். கடந்த 5ஆம் தேதி விநாயகர் சிலை கரைப்புக்காக திருப்பூர் மாவட்டம், அங்கேரிபாளையம் சிங்காரவேலன் நகர் பகுதியில் சிலை அமைத்திருந்த இந்து முன்னணியைச் சேர்ந்த 60 பேர் சிலை வாகனத்துடன் புறப்பட்ட னர். ஊர்வலத்துக்குப் போவதற்கு முன்பாக சக்தி தியேட்டர் சாலை சந்திப்பு அருகே இருந்த வி.கே.கார்மெண்ட்ஸ் நிறுவனத்துக்குள் விநாயகர் சிலை வாகனத்துடன் அந்த கும்பல் புகுந்தது. நிறுவன ஜன்னல் கண்ணாடிகளையும், பூத் தொட்டிகளையும் உடைத்து சேதப் படுத்தினர். அங்கிருந்த காவலரைத் தாக்கியதுடன், உள்ளே இருந்த தொழிலாளர்களையும், பெண்க ளையும் ஓட ஓட விரட்டித் தாக்கி னர். இந்த கொலைவெறித் தாக் குதல் திருப்பூர் தொழில் துறையி னருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்ப படுத்தி இருப்பதுடன், அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரி வித்துள்ளனர். இந்த சம்பவத்தில் மேற்படி தொழிற்சாலை நிர்வாகத்தின் சார்பில் தாக்குதலில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் பெயர் குறிப்பிட்டு புகார் தெரிவிக்கப் பட்டது. இந்த புகாரின் மீது 25 பேர் மீது வழக்குப்  பதிவு செய்த அனுப்பர்பாளையம் காவல் நிலை யத்தார் குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.  இதில் அங்கேரிபாளையம் சாலை சிங்காரவேலர் நகரைச் சேர்ந்த தண்ணீர் கேன் விற்பனை யாளரான வை.கார்த்திக் (23), அவரது தம்பி கோவை தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வரும் வை.ராதாகிருஷ்ணன் (19), அதே பகுதியைச் சேர்ந்த தள்ளுவண்டி பாஸ்ட்புட் கடை நடத்தி வரும் மாதேஸ்வரன் (19), பிச்சம்பாளை யம் புதூர் ஸ்ரீ நகரைச் சேர்ந்த க.உதயகுமார் (32) ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். மேலும்,பனியன் கம்பெனி யில்தாக்குதல் நடத்திய சம்பவம் அந்த கம்பெனி சிசிடிவி கேமரா வில் பதிவாகி இருப்பதைக் கொண்டு மற்ற குற்றவாளிகளை யும் தேடி வருவதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர்.