கோவை, மே 12 - சிறு, குறு நிறுவனங்களுக் கென்று சிறப்பு நிவாரண திட்டங் களை அறிவித்திட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் கோவை மாவட்டக் குழு கூட்டம் காணொளி மூலம் செவ் வாயன்று நடைபெற்றது. இதில் கோவை நாடாளுமன்ற உறுப்பி னர் பி.ஆர்.நடராஜன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்ம நாபன் உள்ளிட்ட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப் பினர்கள் பங்கேற்றனர். இக்கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னங்கள் பின்வருமாறு, கொரோனா ஊரடங்கினால் சிறு, குறு, நடுத்தர தொழில்களின் நிலைமை சீர்குலைந்துள்ளது. ஆகவே, இத்தொழில் நிறுவனங் களுக்கென்று சிறப்பு நிவாரண திட்டங்களை அறிவித்திட வேண் டும். இதேபோல், பணியாற்றும் தொழிலாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்காக மத்திய அரசு மானியம் அளிப்பது, வட்டி இல்லாத கடன் வழங்கு வது, ஆறு மாத காலம் கடன் தவ ணைகள் கேட்கக் கூடாது என்கிற வாக்குறுதியை உறுதி செய்திட வேண்டும். மேலும், கொரோனா காலத்தில் செலுத்த முடியாத வங்கி கடன் தவணைகளுக்கு வட்டி, அபராதம் உள்ளிட்டவைகளை தள்ளுபடி செய்வதுடன், செலுத்த முடியாத தவணை தொகைகளை கடன் தவணை இறுதியாக செலுத்த வேண்டிய காலத்தில் செலுத்தினால் போதும் என்கிற அறிவிப்பை வெளியிட வேண் டும். மேலும், கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், கல்லூரி கள், பள்ளிகள், வியாபார நிறுவ னங்களில் பணிபுரிய கூடியவர்க ளுக்கு சம்பளம் வழங்கப்பட வில்லை. இதுதொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் தலை யிட்டு சம்பளம் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும். இதே போல், புலம்பெயர்ந்த தொழிலா ளர்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முறையான கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் வசிக்க கூடிய இடத்திலிருந்து ரயில் நிலையத்திற்கு செல்ல போதிய போக்குவரத்து வசதி களை ஏற்பாடு செய்திட வேண் டும். அதேநேரம், கோவையி லேயே தொடர்ந்து தங்கி பணி புரிய விருப்பம் தெரிவிப்பவர்க ளுக்கு ரேசன் மற்றும் உரிய நிவாரண உதவியாக ரூ.5 ஆயிரம் உடனடியாக வழங்க வேண்டும். 12 மணி நேர வேலை என்பன உள்ளிட்ட தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கைவிட வேண் டும். இதேபோல், மின்கட்டண நிலு வையை வசூலிக்கும் போது 3 மாதம், 4 மாதம் என மொத்த யூனிட்க்கும் சேர்ந்து வசூலிக்கா மல், முந்தைய மாதங்களில் பயன்பாட்டு ரீடிங்க் கணக்கெ டுப்பு செய்து அதன்படி ஒவ்வொரு மாதத்திற்கும் பயன்படுத்திய யூனிட்களுக்கு கட்டணம் வசூ லிக்க வேண்டும். ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7500 வழங்கிட வேண்டும். இதேபோல், அமைப்பு சாரா தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் இரு மாதத்திற்கான தொகை உடனடியாக வழங்கப் பட வேண்டும். விவசாய தொழிலா ளர்களுக்கு 100 நாள் வேலையை 200 நாட்கள் வழங்க அனைத்து பகுதியிலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.5 ஆயிரம் நிவாரண நிதியாக வழங்க வேண்டும். மேலும், கொரோனா பாதிப் பில் நாட்டில் 3 ஆம் இடத்தில் உள்ள தமிழகத்திற்கு நிவாரண பணிகள் மேற்கொள்ள போதிய நிதி ஒதுக்காமல் மத்திய பாஜக அரசு வஞ்சித்து வருவதற்கு கண் டனம் தெரிவிப்பதுடன், பி.எம் கேர் நிதியை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத் தில் நிறைவேற்றப்பட்டது.