திருப்பூர், செப். 3 – ஊத்துக்குளி அருகே தனது உறவினர் நிலத்தை பாதுகாக் கும் விதத்தில் உயர் மின் கோபுர பாதையை மாற்றி முறைகேடு செய்த மின் பாதை தொடரமைப் புக் கழக செயற்பொறியாளரைக் கண்டித்து விவசாயிகள் கூட்டம் நடத்தினர். அரசூர் முதல் ஈங்கூர் வரை செல்லக்கூடிய உயர் மின் பாதைக்கு, ஊத்துக்குளி வட் டம் விஜயமங்கலம் சாலை, மேட்டுக்கடை பகுதியில் மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. வரைபடப்படி நேராக வர வேண்டிய இந்த மின் பாதை குறிப்பிட்ட இடத்தில் வளைவாக செல்லும்படி மாற்றி அமைத்துள் ளனர். இது குறித்து விவசாயி கள் விசாரித்தபோது, உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டத்தின் மின் பாதை தொடரமைப்புக் கழக செயற்பொறியாளர் அருளர சன் என்பவர், சுயநல நோக்கத் தில் இந்த முறைகேட்டை செய் திருப்பது தெரியவந்தது. திட்டப் படி நேராகச் செல்லும்படி மின் கோபுரம் அமைக்கப்பட்டால், செயற்பொறியாளர் அருளரச னின் உறவினரான, பெருந்துறை ஸ்ரீ தேவி ஸ்டீல்ஸ் உரிமையா ளருக்குச் சொந்தமான 27 ஏக்கர் நிலத்தின் வழியாகச் செல்லும் எனக் கூறப்படுகிறது. ஆனால் தனது உறவினரின் நிலம் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக மின் பாதையை மாற்றி, பக்கத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளின் நிலத்தின் வழியாக நான்கு மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்து டன் இந்த நான்கு மின்கோபு ரங்கள் அமைப்பதற்காக சிறு, குறு விவசாயிகளின் நிலத்தில் இருந்த தென்னை, பனை உள்ளிட்ட மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டுள்ளன. விவசாய சாகுபடியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு மின்கோபுரம் அமைப்பதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில், நான்கு மின் கோபுரங்களுக்கு ரூ.ஒரு கோடிக்கு மேல் கூடுதலாக செலவிடப்பட் டிருக்கும் என்றும் தெரிகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட் டோரிடம் புகார் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், மேற்படி முறைகேட்டை செய்த செயற்பொறியாளர் அருளரசன் மீது ஊழல் முறைகேடு குற்றச் சாட்டில் நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளின் விளைநிலத்தில் அமைக்கப்பட்ட மின்கோபுரங் களை மாற்றி அமைக்கவும், அதற்கு உரிய இழப்பீடு வழங்க வும் வலியுறுத்தி செவ்வாயன்று கண்டனக் கூட்டம் நடத்தப்பட் டது. மேட்டுக்கடையில் உயர் மின் கோபுரத்தால் பாதிக்கப்பட்ட ராமசாமி என்ற விவசாயி நிலத் தில் நடைபெற்ற இக்கூட்டத் திற்கு தமிழக விவசாயிகள் பாது காப்புச் சங்க செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தார். இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், விவசாயிகள் சங்க பல்லடம் ஒன்றியச் செயலாளர் வி.பழனிசாமி, உயர் மின்கோபுர எதிர்ப்பு விவசாயிகள் கூட்ட மைப்பு சட்ட ஆலோசகர் வழக் கறிஞர் ஈசன், தற்சார்பு விவசாயி கள் சங்கத் தலைவர் கி.வெ.பொன்னையன், தமிழக விவ சாயிகள் பாதுகாப்புச் சங்கத் தலைவர் சண்முகசுந்தரம், விவசாயிகள் சங்க நிர்வாகி சென்னிமலை பொன்னுசாமி, பவானி கவின், பெருமாநல்லூர் முத்து உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர். இப்பகுதி விவசாயிகள் திரளா னோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில், மின்கோபுரம் அமைப்பதில் முறைகேடு செய்த அருளரசன் மீது சட்டப்படி நட வடிக்கை எடுக்க வேண்டும், விவ சாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலி யுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.