tamilnadu

img

அரசு பேருந்துகளின் வழித்தடங்களில் தனியார் பேருந்துகளை அனுமதிக்காதே

அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.5- அரசு பேருந்துகளின் வழித்தடங் களில் தனியார் பேருந்துகளை அனு மதிக்கக் கூடாது என வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை யில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  போக்குவரத்து கழகங்களின் வர வுக்கும் செலவுக்குமான பற்றாக் குறையை பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும். சம்பள பேச்சுவார்த் தையை உடனடியாக துவக்க வேண் டும். மத்திய அரசின் சதிக்கு துணை போகாமல் மின்சார பேருந்துகளை அரசுபோக்குவரத்து கழகமே இயக்க வேண்டும். ஓட்டுநர், நடத்துநர்,  பணியாளர், காலிப்பணியிடங் களை தனியாருக்கு தரக்கூடாது. ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க  வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக் கும் ஒப்பந்தப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் அரசு போக்கு வரத்து கழக அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் கண்டன இயக்கம் நடத்த அறைகூவல் விடுக்கப்பட்டது. இதன் ஒருபகுதியாக கோவை மேட்டுபாளையம் சாலையில் உள்ள அரசு போக்குவரத்து கழக தலைமை பணிமனை முன்பு செவ்வாயன்று போராட்டம் நடைபெற்றது. ஏஐடியுசி தலைவர் மோகன்ராம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், எல்பிஎப் சங்கத்தின் பெரியசாமி, ரத்தினவேல், சிஐடியு பரமசிவம், வேளாங்கண்ணிராஜ், கோபால், எச்எம்எஸ் ஜெகதீஸ், ஏஐடியுசி சண்முகம், ஐஎன்டியுசி தௌத்கான், எம்எல்எப் குமணன், டிடிஎஸ்எப் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உரையாற்றினர். இதில் ஏராளமான அரசு போக்கு வரத்து கழக ஊழியர்கள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி கண் டன முழக்கங்களை எழுப்பினர்.