tamilnadu

img

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக-வினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 17- மத்திய அரசு கொண்டு வந்த புதிய குடியுரிமை சட்ட மசோதா விற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மற்றும் ஈரோட்டில் திமுவினர் கண் டன ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட் டனர். கோவை டாடாபாத் பவர்ஹ வுஸ் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல்ஏ தலைமை விகித்தார். இதில் புறநகர் வடக்கு மாவட்ட செயலா ளர் சிஆர்.இராமசந்திரன்,திமுக சொத்து பாதுகாப்புகுழுதுணைத் தலைவர்பொங்கலூர்நா.பழனிச் சாமி,நந்தக்குமார், மெட்டல் மணி  உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், கருங்கல் பாளையம் காந்தி சிலை அருகே நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு தி.மு.க.வின் ஈரோடு தெற்கு மாவட்ட செயாலாளர் சு.முத்து சாமி தலைமை வகித்தார். மாநகரச் செயலாளர் மு.சுப்பிரமணி, நெசவா ளர் சங்கத்தின் மாநில நிர்வாகி எஸ். எல்.டி. சச்சிதானந்தன், முன்னாள் அமைச்சர் செல்வராஜ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கந்த சாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் சந்திரகுமார் ஆகியோர் பங் கேற்று கோரிக்கைகளை விளக்கி பேசினர்.  இந்த ஆர்ப்பாட்டங்களில், குடி யுரிமை சட்ட திருத்தத்தை கண்டித் தும், அதனை திரும்பப் பெற வலியு றுத்தியும் முழக்கங்களை எழுப்பி னர்.