tamilnadu

img

குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக சிறப்புக் கருத்தரங்கம்

ஈரோடு, ஜன. 31- மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத் திருத்தம், குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகைக் கணக் கெடுப்பு ஆகிய சட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மற்றும் தமிழக மக்கள்  ஒற்றுமை மேடை அமைப்பினர் ஈரோடு பெரியார் மன்றத்தில் வியாழனன்று சிறப்பு கருத்தரங்கத்தை நடத்தினர். இந்த கருத்தரங்கிற்கு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்ட தலைவர் கே.எஸ்.இஸாரத்தலி தலைமை வகித்தார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை யில் மாநில குழு நிர்வாகி எஸ்.ஜமேஷ் வரவேற்புரை யாற்றினர். இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், காயிதே மில்லத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தாளாளர் தாவூத் மியாகான், கீழமை நீதிமன்ற வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில நிர்வாகி திருமலைராஜன் உள்ளிட்டோர் சிறப்புரை யாற்றினர். சிறுபான்மை மக்கள் நல குழுவின் மாவட்ட செயலாளர் மாரிமுத்து, தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநிலக்குழு உறுப்பி னர் கே.துரைராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய தேசிய காங்கிரஸ் மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய கிறிஸ்துவ லீக், மனிதநேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அமைப்புகளை சேர்ந்தஏராளமானோர் கலந்து கொண்டனர்.