திருப்பூர், ஏப்.18-திருப்பூர், எல்ஆர்ஜி மகளிர் கல்லூரி இளநிலை பட்ட வகுப்பிற்கான மாணவியர்கள் சேர்க்கை மற்றும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி தென்னம்பாளையம் பள்ளியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கல்வித்துறையின் சார்பில் இளநிலை பாடப் பிரிவுகளுக்கான விண்ணப்பம் அந்தந்த கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்லடம் சாலையில் உள்ள எல்ஆர்ஜி இளநிலை பாடப்பிரிவுகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு வந்தது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையமாகவும், வாக்குப்பெட்டிகள் வைக்கும் ஸ்ராங் ரூம் போன்றவைகளுக்கு இந்த கல்லூரியை தேர்ந்தெடுத்துள்ளனர். இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாள் வரை கல்லூரி வளாகத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கல்லூரியில் வழங்க கூடிய இளநிலை பாடப்பிரிவுகளுக்கான சேர்க்கை மற்றும் விண்ணப்பங்கள் பதிவு செய்யும் பணி திருப்பூர் தென்னம்பாளையம் பள்ளியில் வழக்கம் போல் நடைபெறும் என கல்லூரி நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு பலகை வைத்திருந்தனர்.