தருமபுரி, ஏப்.9-தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமாருக்குஆதரவாக மாதர் சங்கத்தினர் வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர்.மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் மருத்துவர் எஸ்.செந்தில்குமார் போட்டியிடுகின்றார். அவருக்கு ஆதரவாக மாதர் சங்கத்தினர் தருமபுரி நகரம், வைண்டிங் டிரைவர் சின்னசாமிதெரு, சின்னதாயம்மள்தெரு, துறைசாமிகவுண்டர்தெரு, த.வே.வடிவேல் கவுண்டர்தெரு, சூடாமணிதெரு, நெடுமாறன்நகர் ஆகிய பகுதிகளில் வீடு வீடாக தீவிர வாக்குசேகரித்தனர்.இதில், மாதர் சங்கத்தின் மாவட்டச்செயலாளர் எஸ்.கிரைஸாமேரி, மாவட்ட துணை தலைவர் கே.பூபதி நிர்வாகிகள் கே.சுசிலா, நிர்மலாராணி, கல்பனா, மாது, உமாராணி, வேட்பாளர் எஸ்.செந்தில்குமாரின் துணைவியார் சோபனா,காங்கிரஸ் கட்சி மகளிர் அணி நிர்வாகிகள் முன்னாள் கவுன்சிலர் காளியம்மாள், ரோஜா, ராஜேஸ்வரி, தனபாக்கியம், லட்சுமி, பட்டு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இதேபோல், திமுக கூட்டணி கட்சிகளின் சார்பில் தருமபுரி நகரம் எஸ்.வி.ரோடு, காந்திநகர், நரசையர்குளம், அப்பாவுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் திமுகநகர செயலாளர் தங்கராசு, முன்னாள் நகர மன்ற தலைவர் சிட்டிமுருகேசன், முன்னாள் கவுன்சிலர்கள் பி.மோகன், சுருளிராஜன், முல்லைவேந்தன், தங்கமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிநகரசெயலாளர் ஆர்.ஜோதிபாசு, எம்.கார்த்திகேயன், காங்கிரஸ் கட்சி நகரதலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இப்பிரச்சாரத்தில், ஏழைகளுக்கு மனைபட்டா கிடைக்கவும், நீண்ட காலம் வீடுகட்டி குடியிருபோருக்கு மனைபட்டா, ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும், 60 வயதானவர்களுக்கு முதியோர்உதவித்தொகை கிடைக்கவும், பெண்களுக்கு 33 சதவிகித இடஒதுக்கீடு பெற தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் எஸ்.செந்தில்குமாருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டனர்.