அவிநாசி பேரூராட்சி, தெக்கலூர் ஊராட்சிகளில் பொது சுகாதார துணை இயக்குநர் சம்பத்குமார் கொசு ஒழிப்பு பணி நடவடிக்கைகள், டெங்கு, வைரஸ் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவை கேட்டறிந்து, கொசு ஒழிப்பு பணிகள் சிறப்பாக செய்ய வேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். இதில் மாவட்டதுணை இயக்குநர் மருத்துவர் ஜெகதீஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சக்திவேல், மாவட்ட பூச்சியியல் அலுவலர் சேகர், செயல் அலுவலர், சுகாதார ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.