கோவை, ஜூன் 21– கோவையில் ஞாயிறன்று 15 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில், சென்னையில் இருந்து அனுமதி யின்றி வந்த ஜிஆர்டி நகைக்கடை ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஞாயிறன்று ஒரு சிறுவன் உள்ளிட்ட 10 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இதில், காந்திபு ரம் கிராஸ்கட் சாலையை சேர்ந்த 4 பேருக்கும், அன்னூர் 2, சிறுமுகை, காரமடை, வடசித்தூர், கரும்புக் கடை, வேலாண்டிபாளையம், செல்வபுரம், சூலேஸ்வரம்பட்டி, இராமநாதபுரம், பொள்ளாச்சி தலா ஒருவர் இதில் அடங்கும். முன்னதாக சாலை மார்க்கமாக அனுமதியின்றி சென்னையில் இருந்து ஜிஆர்டி நகைக்கடை ஊழியர்கள் 30 பேர் அனுமதியின்றி கோவைக்கு வந்த னர். இதனையறிந்து மாவட்ட நிர்வா கத்தின் உத்தரவின்பேரில் சுகாதாரத் துறை, மாநகராட்சி காவல்துறையுன ருடன் சென்று அக்கடைக்கு சீல் வைத்தனர். இதில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கொரோனா பரி சோதனை சனியன்று நடைபெற்றது. இவர்கள் அனைவரையும் தனி மைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில், இந்த ஊழியர்க ளின் மருத்துவ பரிசோதனை முடி வுகள் ஞாயிறன்று வெளிவந்தது.
இதில், சென்னையில் இருந்து கோவைக்கு வந்த 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி யாகி உள்ளது. இது தற்போது மாவட்ட நிர்வாகத்திற்கு அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக இக்கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் குறித் தும், இந்த ஊழியர்கள் சென்ற பகு திகள் குறித்தும் விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மேலும், இக் கடையுள்ள கிராஸ்கட் சாலையின் ஒருபகுதியை தனிமைப்படுத்தப்பட் டுள்ளது. அப்பகுதி முழுவதும் கிரு மிநாசினியை தெளிக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடு பட்டுள்ளனர். கோவை மாவட்டத்தில் கடந்த 6 நாட்களில் மட்டும் 100 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள் ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவம னையில் கொரோனா தொற்று கார ணமாக பல்வேறு பகுதிகளை சேர்ந்த 142 பேர் சிகிச்சை பெற்று வருகின்ற னர்.