tamilnadu

img

தமிழகத்தில் அதிகரிக்கும்  டெல்டா வகை கொரோனா - சுகாதாரத்துறை 

தமிழகத்தில் அதிகமானோர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெல்டா வகை கொரோனா தொற்றால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 80% பேர் டெல்டா வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரியவந்துள்ளதாக  சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், டெல்டா வகை கொரோனா தொற்று 100% பாதிப்பை ஏற்படுத்துகிறது. டெல்டா வகை கொரோனா தொற்று சிகிச்சை குறித்து மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை.  தேவையான அனைத்து சிகிச்சை வசதிகளும் தமிழகத்தில் உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.  

மேலும், கொரோனா மரபியல் மாற்றங்களை ஆய்வு செய்யக் கண்டறியும் மரபணு  ஆய்வகம் சென்னையில் அடுத்த மூன்று  நாட்களில் செயல்பட உள்ளது. பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில் படிக்க வரும் அனைத்து மாணவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.