பொள்ளாச்சி, ஜூன் 22- கொரோனோ வைரஸ் தொற்றின் தாக்கத்தால் பொள் ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கி வந்த சலூன் கடைகள் ஒரு மாத காலத்திற்கு திறக்க படாதென சவர தொழிலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு சவர தொழிலாளர்கள் சங்கத் தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரி வித்துள்ளதாவது, தமிழகம் முழுவதும் கொரோனோ வைரஸ் தொற்று நோய் நாளுக்கு நாள் அதிகரித்து வருகி றது.
குறிப்பாக கோவை மாவட்டத்தில் அதிக அளவிலா னோர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிப்பிற்குள் ளாகி வருகின்றனர். இந்நிலையில், கொரோனா வைரசின் பாதிப்பை உணர்ந்து பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதிகளில் இயங்குகின்ற 50 க்கும் மேற் பட்ட சலூன் கடைகள் ஜூலை மாதம் 22 ஆம் தேதி வரை மூடப்படும் எனவும், இதற்கு பொள்ளாச்சி மற்றும் ஆனை மலை பகுதிகளைச் சேர்ந்த சவர தொழிலாளர்கள் ஒத்து ழைப்பு தர வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.