கோவை, ஏப். 28- கோவை காந்திபுரம் பார்க் சிக்னலில் இருந்து கணபதி வரை புதிய மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள்பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இந்தப் பாலம்மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ற பாலம் அல்ல என்கிறகுற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வந்தது. இந்நிலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்என்பதற்காக கட்டப்பட்ட இந்த பாலம் எந்தவகையிலும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான பாலமாக இல்லை. போக்குவரத்து நெரிசல் அதிகமாக ஏற்படும் இடங்களான காந்திபுரம், 100 அடி சாலை மற்றும் பாப்பநாயக்கன்பாளையம் சாலை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்தப் பாலத்தை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏற்கனவேதிட்டமிட்ட மூன்றடுக்கு பாலம் என்பதை மாற்றி சிலவர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக இந்த பாலம் மாற்றி அமைக்கப்பட்டதாககூறப்படுகிறது. தற்போது 100 அடி சாலையில் துவங்கி பாப்பநாயக்கன்பாளையம் மின் மயானம் வரை உயர்மட்ட பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாலம் மிக அதிக உயரத்துக்கு செல்வதால் இந்த பாலத்தில் வாகனங்கள் ஏறுமா என்கிறஅச்சம் பொதுவாக வாகன ஓட்டிகளுக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் காந்திபுரம் மேம்பாலத்தை கடக்கும் இந்த உயர்மட்ட பாலம் குறுகிய நிலையில் உள்ளது. இதனால் மிகப்பெரிய கண்டெய்னர் லாரிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் ஞாயிறன்று காலை காந்திபுரம் பார்க் வீதியில் இருந்து கணபதி நோக்கி சென்ற கண்டெய்னர் லாரி ஒன்று உயர்மட்ட பாலத்திற்கு அடியில் செல்ல முடியாமல் சிக்கி நின்றது. இதனால் வாகனத்தை திருப்ப முடியாமலும் பாலத்துக்கு அடியில் செல்ல முடியாமலும் பல மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.