tamilnadu

img

சிறுமி பாலியல் வன்கொலை வழக்கை பலவீனப்படுத்த சதி மூத்த வழக்கறிஞர் ரத்தினம் குற்றச்சாட்டு

கோவை, டிச. 29-  துடியலூர் பன்னிமடைச் சேர்ந்த  6 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை வழக்கில் மற்றொரு குற்ற வாளியை கண்டுபிடிக்க, ஏற்கனவே  இவ்வழக்கை விசாரித்த அதே அதி காரியை நியமிப்பதன் மூலம் வழக்கை பலவீனப்படுத்த சதி நடப்பதாக வழக்கறிஞர் ரத்தினம் குற்றம்சாட்டியுள்ளார் கோவை பன்னிமடை பகுதியில்  6 வயது சிறுமி பாலியல் வன் கொடுமை செய்து கொலை செய் யப்பட்ட வழக்கில் கைது செய்யப் பட்ட சந்தோஷ்குமாருக்கு நீதி மன்றம் தூக்கு தண்டனை விதித்தது.  மேலும் சிறுமியின் உடலில் இருந்த மற்றொரு நபரின் விந்தணு தொடர்பாக கூடுதல் புலன் விசாரணை நடத்தி குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு தொடர்பாக சிறுமியின் தாயார் தரப்பு வழக்கறிஞர் ரத்தினம்  காந்திபுரம் பகுதியில் உள்ள பெரி யார் படிப்பகத்தில் ஞாயிறன்று செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்தார்.  அப்போது பேசிய அவர்,   சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மற்றொரு நபரை கண்டு பிடிக்க நீதிமன்றம் உத்தர விட்டுள்ள நிலையில், துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய  ஆய்வாளர் மீனாம்பிகை தலை மையில் மீண்டும் விசாரணை நடத்தப்படும் என்ற செய்தி வெளி யாகியுள்ளதாக தகவல் வருகிறது. ஏற்கனவே விசாரணை நடத்திய அதே அதிகாரியை விசாரணை அதி காரியாக நியமிப்பது தவறு.  ஏற் கனவே வழக்கை விசாரித்த மீனாம்பிகை விசாரணை நடத் துவது, வழக்கை பலவீனப் படுத்தும். இவ்வாறு வழக்கை பல வீனப்படுத்த சதி நடக்கிறது. தமிழக அரசு தலித் மக்களுக்கு துரோகம் செய்கிறது. இதுதொடர்பாக தலைமை நீதிபதியிடம் புகார் அளிப்போம். இதுகுறித்து தமிழ் நாடு காவல் துறை தலைவரிடம் கேட்ட போது, வேறு  ஒரு அதி காரியை நியமிப்பதாக கூறி னார். ஆகவே தகுதியான வேறு  அதிகாரியை விசாரணை அதி காரியாக நியமிக்க வேண்டும் என ரத்தினம் தெரிவித்தார்.